Tamilnadu
விமானம் வெடித்து சிதறும்... சென்னை விமான நிலையத்திற்கு இ-மெயிலில் வந்த வெடிகுண்டு மிரட்டல்!
சென்னை விமான நிலையத்தில் தினந்தோறும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானங்கள் வந்து செல்கின்றன. அப்போது விமான நிலையம் பரபரப்பாகவே காணப்படும். மேலும் அரசியல் தலைவர்கள் முதல் சினமா நடிகர்கள் பலரும் சென்னை விமான நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை விமான நிலைய இ -மெயில் முகவரிக்கு மர்ம நபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் மெயில் அனுப்பியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதில், விமான நிலையத்தில் வெடிகுண்டு வெடிக்கப் போகிறது. மா்மநபர் விமானநிலையத்திற்கு வந்து கொண்டிருக்கிறார். அவரது உடமையில் வெடிகுண்டு உள்ளது. எனவே அந்த மா்ம நபா் பயணிக்கும் விமானத்திற்கு ஆபத்து உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வேறு எந்த தகவலும் இந்த மெயிலில் இல்லை.
இதையடுத்து சென்னை விமான நிலைய அதிகாரிகள் உடனடியாக, விமான பாதுகாப்பு அதிகாரிகள், மத்திய தொழில் பாதுகாப்புப் படை அதிகாரிகள், தீவிரவாதிகளைக் கண்காணிக்கும் கியூ பிரிவு போலிஸார், தமிழக உயா் போலிஸ் அதிகாரிகள் ஆகியோருக்கு அவசர தகவல் அனுப்பினர்.
மேலும், உயா் அதிகாரிகளின் அவசர ஆலோசனை கூட்டம் உடனடியாக நடந்தது. இதில், வெளிநாடு செல்லும் பயணி ஒருவரைத் தடுத்து நிறுத்துவதற்காக வந்த மெயிலாக இருக்கலாம் என்று தெரியவந்துள்ளது. மேலும் இது குறித்து தீவிரமாக விசாரணை நடைபெற்று வருகிறது.
இதையடுத்து சென்னை விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. விமான பயணிகளுக்கு வழக்கமாக 3 அடுக்கு சோதனைகள் நடக்கும். தற்போது கூடுதலாக,மேலும் ஒரு சோதனை நடத்தப்படுகிறது.
Also Read
-
“74,168 விவசாயிகளுக்கு குறைந்தபட்ச மானிய விலை (MSP) நிதி வழங்காதது ஏன்?” : திருச்சி சிவா எம்.பி கேள்வி!
-
“அரசியலமைப்புப்படி வழங்க வேண்டிய 27% இடஒதுக்கீடு எங்கே போனது? இதுதான் சமூக நீதியா?” : பி.வில்சன் எம்.பி!
-
தமிழ்நாடு விளையாட்டு மாநாடு 2.0 - 2025 தொடக்கம்! : முழு விவரம் உள்ளே!
-
“பா.ஜ.க.வின் பழிவாங்கும் நோக்கம் அம்பலமாகியுள்ளது!”: ‘நேஷனல் ஹெரால்டு’ வழக்கு குறித்து முதலமைச்சர் பதிவு!
-
தி.மு.கழக மகளிர் அணியின் ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ மாநாடு! : எங்கு? எப்போது?