Tamilnadu
மூளைச்சாவு அடைந்த இளைஞர்.. பாச மகனின் நுரையீரல், இதயம் தானமாக வழங்கிய பெற்றோர்: நெகிழ்ச்சி சம்பவம்!
மயிலாடுதுறை மாவட்டம், நல்லத்துகுடி பகுதியைச் சேர்ந்தவர் அய்யப்பன். இவரது மனைவி வாசுகி. இவர்களுக்கு மாதேஷ், தினேஷ் என இரு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் அய்யப்பன் கடந்த 7ம் தேதியன்று சாலை விபத்தில் படுகாயமடைந்தார். பின்னர் அவர் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மேல் சிகிச்சைக்காகத் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதையடுத்து அய்யப்பன் மூளைச்சாவு அடைந்துவிட்டதாக அவரது பெற்றோர்களிடம் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதைக் கேட்ட அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
பிறகு மருத்துவர்கள் ஆலோசனைப்படி தனது பாச மகன் உடல் உறுப்புகளை தானம் செய்யப் பெற்றோர்கள் முன்வந்தனர். இதையடுத்து அவரது கண்கள் இரண்டும் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குத் தானமாக வழங்கப்பட்டது.
மேலும் நுரையீரல் மற்றும் இதயம் ஆகியன சென்னையில் உள்ள தனியார் (எம் ஜி எம்) அனுப்பப்பட்ட அனுப்பப்பட்டது. அதேபோல் திருச்சியில் உள்ள (எஸ்ஆர்எம்) தனியார் மருத்துவமனைக்கு மற்றும் திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தலா ஒரு சிறுநீரகம், மதுரையில் உள்ள தனியார் கல்லூரி தானமாக ஆம்பூலன்ஸில் அனுப்பி வைக்கப்பட்டது.
இதில் சென்னைக்குச் செல்லும் உறுப்புகள் திருச்சி கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து இரவு விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டது . உடல் உறுப்புகள் கொண்டு செல்லப்படும் இரு ஆம்புலன்ஸ் முன்னேயும், பின்னேயும் போலிஸ் வாகனங்கள் பாதுகாப்புக்காகச் சென்றன.மூன்று மணிநேரத்திற்குள் விமானம் மூலம் சென்னைக்கு உடல் உறுப்புகள் எடுத்து வரப்பட்டுள்ளது.
மேலும் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதல் முறையாக மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் : அதிகாரிகளுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்!
-
சென்னையில் எப்போது மழை நிற்கும்? : வானிலை ஆய்வு மையம் சொல்வது என்ன?
-
”மாற்றுத்திறனாளிகளின் ஒளிமயமான வாழ்வுக்கு நாம் அனைவரும் பாடுபடுவோம்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“நலம் காக்கும் ஸ்டாலின்” திட்டம் : தமிழ்நாடு முழுவதும் 9,86,732 பேர் பயன்!
-
கனமழையில் இருந்தும் உள்ளூர் மக்களை மட்டுமல்ல; கடல் கடந்து சென்றவர்களையும் காத்த தமிழ்நாடு அரசு : முரசொலி!