Tamilnadu
முதல்வர் மற்றும் பட்டியலினத்தவர் குறித்து ஆபாச பேச்சு.. வன்கொடுமை சட்டத்தின் கீழ் பா.ஜ.க பிரமுகர் கைது !
திருவள்ளுர் அருகே திருநின்றவூர், அடுத்த கொசவம்பாளையம், கொட்டம்மேடு பகுதியை சேர்ந்தவர் பூபதி(32). தொழில் நிறுவனங்களுக்கு ஆட்களை அனுப்பும் தொழில் செய்து வருகிறார். இவர் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களை குறித்து சமூக வலைத்தளத்தில் அருவருக்கத்தக்க ஆபாச வார்த்தைகள் பேசி வீடியோ வெளியிட்டிருந்தார்.
மேலும் தனது சமூகத்தை சேர்ந்த உறவினர் பெண் பட்டியலினதவருடன் காதல் திருமணம் செய்து கொண்டார் என கூறி பட்டியலினதவர்களை கொச்சையாக பேசி, அதனை சில தினங்களுக்கு முன்னர் வீடியோவாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட நிலையில், இந்த காட்சிகள் வேகமாக பரவியதை தொடர்ந்து பலரும் இணையத்தில் தமிழக காவல்துறையை தொடர்புக் கொண்டு நடவடிக்கை எடுக்கும்படி கோரி இருந்தனர்.
இந்தநிலையில் இந்த வீடியோ பதிவு பற்றி திருவள்ளூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பிரேம் ஆனந்த் முதல்வர் குறித்து அவதூறு பேசிய நபர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருநின்றவூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் SC/ST வன்கொடுமை தடுப்பு சட்டம், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், IT ACT உள்ளிட்ட சட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து தேடிவந்தனர்.
இந்த நிலையில் தலைமறைவாக இருந்த பூபதி வெங்கடேசனை திருநின்றவூர் காவல் ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் தலைமையிலான காவலர்கள் ஆவடி அருகே கைது செய்த காவல் துறையினர் பூபதியிடம் விசாரணை மேற்கொண்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். முதல்வர் மற்றும் பட்டியலினதவர்கள் குறித்தும் அவதூறாக பேசி வீடியோ பதிவிட்ட பா.ஜ.க கட்சி பிரமுகர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
தேசிய மக்கள் தொகை, சாதிவாரி கணக்கெடுப்பு : பிரதமர் மோடிக்கு முக்கிய ஆலோசனை வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின்
-
“தணிக்கை வாரியத்தை கூட்டணியில் சேர்த்து கொண்ட பா.ஜ.க” : அமைச்சர் ரகுபதி பேட்டி!
-
‘பராசக்தி’ திரைப்படம் - பேரறிஞர் அண்ணா வசனம் நீக்கம் : வாய் திறக்காத அ.தி.மு.க.!
-
“தி.மு.க-காரன் சிங்கில் டீயை குடித்துவிட்டு பம்பரமாக வேலை செய்வான்” : பெருமையுடன் சொன்ன முதலமைச்சர்!
-
தமிழ்நாடு முழுவதும் குறள் வாரவிழா : சிறப்பு காணொலியை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!