Tamilnadu
'சேரன் எக்ஸ்பிரஸ்' ரயிலின் இணைப்பு துண்டிப்பு.. தனியே கழண்டு ஓடிய பெட்டிகள்..திருவள்ளூர் அருகே அதிர்ச்சி!
சென்னையில் இருந்து கோவைக்கு தினமும் இயக்கப்படும் ரயில்களில் முக்கியமானதாக சேரன் எக்ஸ்பிரஸ் ரயில் உள்ளது. சென்னை சென்ட்ரலில் இருந்து கோவைக்கு தினந்தோறும் இரவு 10 மணிக்கு சேரன் எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டு மறுநாள் காலை 6 மணிக்கு சென்றடையும். சரியான நேரத்தில் செல்வதால் இந்த ரயிலில் எப்போதுமே பயணிகள் கூட்டம் அலைமோதும்.
'சேரன் எக்ஸ்பிரஸ்' ரயில் வழக்கம் போல நேற்று இரவு 10 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து கோவைக்கு கிளம்பி சென்றது. இரவு 11 மணியளவில் ரயில் திருவள்ளூர் ரயில் நிலையத்தின் 4-வது நடைமேடையில் சென்றபோது திடீரென பயங்க சத்தத்துடன் ரயிலின் பெட்டிகள் திடீரென துண்டிக்கப்பட்டன.
சரியாக S7 மற்றும் S8 ஆகிய 2 பெட்டிகளை இணைக்கும் இரும்பு கொக்கி உடைந்ததால் ரயில் இரண்டாக பிளவுபட்டு S8 பெட்டியுடன் இணைந்து இருந்த இறுதி 16 பெட்டிகள் தனியாக கழன்று ஓடியது. அதேநேரம் ரயில் என்ஜினுடன் சேர்ந்த பெட்டிகள் தனியாக சென்றுள்ளது.
இதனை கவனித்த ஓட்டுநர் பிரேக் பிடித்து வண்டியை நிறுத்தியதால் அங்கு பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. தனியாக கலந்து ஓடிய பெட்டிகளும் சிறிதுதூரம் ஓடி பின்னர் வேகம் குறைந்து நின்றுள்ளது. இதனையடுத்து அங்கு விரைந்து வந்த ரயில்வே பணியாளர்கள் ரயில் பெட்டியில் ஏற்பட்ட உடைப்பு சரி செய்தனர். அதன்பின்னர் ரயில் தாமதமாக கோவைக்கு புறப்பட்டு சென்றது. இதில் சில பயணிகளுக்கு காயம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
Also Read
-
அடுத்தடுத்த நாளில் 2 துயரம்.. நாடோடி மன்னன் முதல் ஆதவன் வரை... பழம்பெரும் நடிகை சரோஜா தேவி காலமானார்!
-
"கழக அரசின் சாதனைகளை, மக்களை ஞாபகப்படுத்திக் கொண்டே இருங்கள்"... துணை முதலமைச்சர் உதயநிதி வேண்டுகோள் !
-
தெற்கு ரயில்வேயின் அலட்சியத்தால் பறிபோன 3 உயிர்கள்... கேட்டை மூடாதது யார் தவறு? - முரசொலி விமர்சனம் !
-
"வள்ளுவரை திருடப்பார்க்கிறர்கள், வள்ளுவரின் வெப்பம் அவர்களை பொசுக்கிவிடும்" - முதலமைச்சர் ஆவேசம் !
-
அதிகாலையிலேயே 7 மீனவர்கள் கைது.. உடனடியாக விடுவிக்கக் கோரி ஒன்றிய அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்!