Tamilnadu
90 நாட்கள் கெடாமல் இருக்கும் டிலைட் பால்.. அறிமுகப்படுத்தியது ஆவின் நிறுவனம் ! விலை என்ன ?
தமிழ்நாட்டில் தி.மு.க அரசு ஆட்சி அமைந்ததிலிருந்து ஆவின் நிறுவனத்தில் பல்வேறு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. சில நாட்களுக்கு முன்பு ஆவின் நிறுவனத்தின் சார்பில் குடிநீர் பாட்டில் விற்பனை விரைவில் தொடங்க உள்ளது என அமைச்சர் நாசர் தெரிவித்திருந்தார்.
அதைத் தொடர்ந்து Cold Coffee, பலாப்பழ ஐஸ்கிரீம், உள்ளிட்ட 10 புதிய பொருட்களை ஆவின் அறிமுகம் செய்தது. இந்த நிலையில், தற்போது குளிர்சாதன பெட்டிக்கு வெளியே வைத்திருந்தால் கூட 90 நாட்கள் புத்துணர்ச்சியுடன் இருக்கும் பாலை ஆவின் நிறுவனம் (ஆவின் டெலைட்) அறிமுகப்படுத்தியுள்ளது. முன்பு இயற்கைப் பேரிடர் போன்ற காலங்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்படும் மக்களுக்குப் பால் பவுடர் போன்றவை வழங்கப்படும். ஆனால் இனி டிலைட் பால் பாக்கெட் வழங்கப்படும் என ஆவின் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வகை பால்களை ஆவின் தயாரிப்புகளை தயாரிக்கும் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு, அல்ட்ரா ஹீட் ட்ரீட்மென்ட் (UHT) மூலம் பாலை உற்பத்தி செய்கிறது. இந்த புதிய ஆவின் பால் UTH முறையை உள்ளடக்கியது,. இதன் கீழ் பால் ஒரு வினாடிக்கு 100 டிகிரி செல்சியஸ்க்கு மேல் சூடுபடுத்தப்பட்டு, பின்னர் அசெப்டிக் முறையில் பேக் செய்யப்படுகிறது.
இதற்கு முன்னதாக தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு சேலத்தில் நீண்ட ஆயுட்காலம் கொண்ட பாலை விற்பனை செய்வதற்கான சோதனையை முன்னெடுத்தது, ஆனால் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு போதிய ஆதரவு இல்லாத காரணத்தால் அதனை நிறுத்தியது.
அதைத் தொடர்ந்து தற்போது UHT கருவிகளை வாங்கிய பிறகு, இந்த ஆண்டு சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள ஆவின் ஆலையில் இதற்கான சோதனை தொடங்கியது, கடந்த வாரம் வெற்றிகரமான சோதனை ஓட்டத்திற்குப் பிறகு, பால் மற்றும் பால்வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் எஸ்.எம்.நாசர் புதன்கிழமை அதைத் தொடங்கி வைத்தார். இதன் விலை 500 மிலி பாக்கெட்டுக்கு ரூ.30 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாலில் எவ்வித வேதிப்பொருளையும் சேர்க்காமல் நவீன தொழில்நுட்ப முறையில் தயார் செய்யப்பட்டுள்ளது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!