Tamilnadu
மின்னல் வேகத்தில் மோதிய பைக்.. தூக்கி வீசப்பட்ட முதியவர்: சாலையில் நடந்த பயங்கர விபத்து!
திண்டுக்கல் மாவட்டம் கலிக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் தாசப்பன். இவர் திண்டுக்கல் - மதுரை நாக்கு வழிச்சாலையின் ஓரமாக தனக்குச் சொந்தமான மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது அவருடன் அதே பகுதியைச் சேர்ந்த லட்சுமி என்பவரும் பேசிக் கொண்டிருந்தார்.
அந்த நேரத்தில் அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் ஒன்று கட்டுப்பாட்டை இழிந்து சாலையோரம் நின்று பேசிக் கொண்டிருந்த தாசப்பன், லட்சுமி மீது மோதியது. அதில் தூக்கி வீசப்பட்ட முதியவரான தாசப்பன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மேலும் லட்சுமி பலத்த காயம் அடைந்தார்.
அதேபோல் இருசக்கர வாகனத்தில் வந்த பஞ்சும் பட்டியைச் சேர்ந்த சுகன்ராஜ், மைக்கேல் சகாய ராஜ் ஆகிய இரு இளைஞர்களும் காயமடைந்தனர். இதையடுத்து அப்பகுதி மக்கள் காயமடைந்த மூன்று பேரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இந்த விபத்து குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த வாரம் தான் நேபாளத்தில் பிரபல பைக் ரைடர் ஜாட் பிரப்ஜோத் அதிவேகமாகச் சென்று மோதியதில் முதியவர் ஒருவர் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
TTF வாசன், ஜாட் பிரப்ஜோத் போன்றவர்கள் அதிவேகமாக இருசக்கர வாகனங்களை ஓட்டி அதை யூடியூபில் வெளியிடுகின்றனர். இதைப் பார்க்கும் இளைஞர்களும் அவர்களைப் போன்ற அதிவேகமாக வாகனம் ஓட்டுகின்றனர். இதனால் விபத்துகள் நடக்கிறது என சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
Also Read
-
SAAF தொடரில் பதக்கம் வென்று அசத்திய தமிழர்கள்.. ரூ.40.5 லட்சம் ஊக்கத்தொகை வழங்கி துணை முதல்வர் பாராட்டு!
-
பூட்டான் சுகாதார அமைச்சகத்தில் பணிபுரிய செவிலியர்களுக்கு வேலைவாய்ப்பு.. விண்ணப்பிப்பது எப்படி? - விவரம்!
-
தேர்தல் ஆணையத்தின் SIR... பாஜக, அதிமுக தவிர்த்த தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சிகளும் எதிர்ப்பு !
-
"இந்த ஆண்டு 1 லட்சத்து 98 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது" - தஞ்சாவூர் ஆட்சியர் !
-
"நேரடி நியமனம் : "ஒன்றிய அரசின் களங்கம் கற்பிக்கும் முயற்சி வெற்றி பெறாது" - அமைச்சர் KN நேரு விளக்கம் !