Tamilnadu
பறந்துசென்ற கோழி.. பிடிக்கமுயன்று பள்ளத்தில் விழுந்து முதியவர் பலி.. மூடநம்பிக்கையால் நேர்ந்த சோகம் !
சென்னை பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர் பகுதியில் தனியார் கட்டுமான நிறுவனம் ஒன்று புதிய அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றை கட்டியுள்ளது. அதற்கான திறப்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், புதிய கட்டிடத்திற்கு கண் திருஷ்டி கழிக்க வேண்டும் என உரிமையாளர் முடிவெடுத்துள்ளார்.
அதற்காக அப்பகுதியை சேர்ந்த ராஜேந்திரன்(வயது-70) என்ற முதியவரிடம் திருஷ்டி கழிக்கும் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி ராஜேந்திரன் திருஷ்டி கழிப்பதற்காக ஊதுபத்தி, சூடம், பூசணிக்காய், உயிருள்ள கோழி ஆகியவற்றை வாங்கிக் கொண்டு அந்த புதிய கட்டிடத்துக்கு சென்றுள்ளார்.
அப்போது எதிர்பாராத விதமான அவர் வைத்திருந்த கோழி பறந்துசென்றுள்ளது. அதைத் தொடர்ந்து அதனை பிடிக்க கோழியின் பின்னால் ராஜேந்திரன் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக கட்டிடத்தில் லிப்ட் அமைப்பதற்காக தோண்டப்பட்டு இருந்த பள்ளத்தில் ராஜேந்திரன் தவறி விழுந்துள்ளார்.
இதில் தலையில் அடிபட்ட அவர் சம்பவஇடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனைக் கண்ட அந்த பகுதியை சேர்ந்தவர்கள் இதுகுறித்து சங்கர்நகர் போலிஸாருக்கு தகவல் அளித்துள்ளனர். அதன்படி சம்பவ இடத்துக்கு வந்த போலிஸார் சடலத்தை பிரேதபரிசோதனைக்காக அனுப்பிவைத்து இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
Also Read
-
இளம்பெண்களின் கவனத்திற்கு... விலையில்லா கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் தடுப்பூசி.. எப்போது செலுத்தப்படும்?
-
“அங்கன்வாடிகளை மாநில அரசிடம் ஒப்படைக்க வேண்டும்...” - திமுக எம்.பி. கிரிராஜன் வலியுறுத்தல்!
-
GSDP வளர்ச்சியில் 16% -தமிழ்நாடு Number One; அதுதான் திராவிட மாடல் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
-
விவசாயிகளின் நிவாரணம் - தமிழ்நாடு அரசின் கோரிக்கைக்கு பதில் என்ன? : வில்சன் MP கேள்வி!
-
மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் எப்போது முடியும்? : நாடாளுமன்றத்தில் கதிர் ஆனந்த் எம்.பி கேள்வி!