Tamilnadu
போன் பேசிக்கொண்டிருந்த மனைவி.. ஆத்திரத்தில் போனை உடைத்த கணவர்.. இறுதியில் நடந்த சோகம் !
திருநெல்வேலி மாவட்டம் பணகுடியைச் சேர்ந்தவர் மைக்கேல் மதன் சிங். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சினேகா என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு காதலித்து திருமணம் செய்துள்ளனர். இந்த தம்பதிக்கு ஒன்றரை வயதில் பெண் குழந்தை ஒன்றும் இருந்துள்ளது.
கணவர் மனைவிக்கு நடுவில் சில ஆண்டுகளாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. மனைவி அடிக்கடி செல்போனில் பேசுவதாக கூறி அவரது கணவர் சினேகாவை கண்டித்து வந்துள்ளார். இதன் காரணமாக சினேகா தந்தை வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று மதன் சிங் மனைவியுடன் தனது சகோதரி வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது சினேகா எப்போதும் போல போன் பேசிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதைக் கண்டு ஆத்திரமடைந்த மதன் சிங் மனைவியின் போனை பறித்து அதை உடைத்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த சினேகா அங்கிருந்து புறப்பட்டு தனது வீட்டிற்கு வந்து அறையை பூட்டிக்கொண்டுளார். சிறிது நேரத்தில் உள்ளே இருந்து அலறல் சத்தம் கேட்டதால் அக்கம் பக்கம் இருந்தவர்கள் கதவை உடைத்து பார்த்தபோது சினேகா தூக்கிட்ட நிலையில் இருந்துள்ளார்.
உடனடியாக அவரை மீட்டவர்கள் அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த அதிகாரிகள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலிஸார் இது கொலையா தற்கொலையா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
“ஒரு மாவட்டத்தில் மட்டும்.. 18 நாட்களில்.. 17 போக்சோ வழக்குகள்” - அதிரவைக்கும் தகவல்களின் முழு விவரம்!
-
“FIFA WorldCup.. ‘கால்பந்து குழந்தை இயேசு’ ரசிகர்களின் அளவிலா அன்பு” - சுவாரசிய சம்பவத்தின் பிண்ணனி!”
-
“கம்பீர் தேவையில்லை.. இந்திய அணிக்கு தோனியை கொண்டு வாருங்கள்… முன்னாள் வீரர் பரபரப்பு கருத்து!”
-
இட்டுன்னு போயி இட்டுன்னு வருவதுதான் அமைச்சரின் வேலை என நினைக்கிறாரா? : தி.மு.க ஐடி விங் கேள்வி!
-
“அனைத்து சட்டமன்ற - நாடாளுமன்ற உறுப்பினர்களும் இணைந்து மேகதாது அணை முயற்சியைத் தடுப்போம்!” : உதயநிதி!