Tamilnadu
கண்டெய்னர் லாரியில் ரகசிய அறை.. 300 கிலோ குட்கா கடத்தல்: அதிரடியாக பறிமுதல் செய்த போலிஸ்!
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த காரணம் பேட்டை அருகே பல்லடம் போலிஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த கண்டெய்னர் லாரியை நிறுத்தி போலிஸார் சோதனை செய்தனர்.
அப்போது, கண்டெய்னரின் உள்ளே காலியாக இருந்தது. இது குறித்து போலிஸார் ஓட்டுனரிடம் கேட்டபோது அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் சந்தேகம் எழுந்தது. பின்னர் வாகனத்தில் ஏறி போலிஸார் சோதனை செய்தனர்.
அதில், வாகனத்தின் உட்புறம் 3-க்கு 8 அடி என்ற அளவில் ரகசிய அறை இருந்ததை போலிஸார் கண்டுபிடித்தனர். அந்த அறையைத் திறந்து பார்த்த பொழுது உள்ளே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் மூட்டை மூட்டையாக இருந்ததை கண்டுபோலிஸார் அதிர்ச்சியடைந்தனர்.
இது குறித்து போலிஸார் நடத்திய விசாரணையில், கண்டெய்னர் லாரி திருப்பூர் மாவட்டம் காரணம்பேட்டையை சேர்ந்த டைட்டஸ் என்பவருக்கு சொந்தமானதும், ஒரு வாரத்திற்கு முன்பு வாங்கியதும், இன்னும் பதிவு எண் வழங்கப்படவில்லை என்றும் தெரிய வந்தது.
இதையடுத்து 23 லட்சம் மதிப்பிலான 300 கிலோ குட்கா மற்றும் கண்டெய்னர் லாரியை போலிஸார் பறிமுதல் செய்து, வாகன ஓட்டுநரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
ஐரோப்பிய பயணத்தின் இரண்டாம் கட்டம் - முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்! : விவரம் உள்ளே!
-
கிளாம்பாக்கம் வரை நீட்டிக்கப்படும் மெட்ரோ சேவை! : ரூ.1,964 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது தமிழ்நாடு அரசு!
-
இஸ்லாமியர்களை புறக்கணிக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு! : ஒன்றிய உள்துறையின் வெறுப்பு நடவடிக்கை!
-
விடுமுறைக்கு ஊருக்கு போறீங்களா?.. அப்போ உங்களுக்கான செய்திதான் இது!
-
TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு : இன்று வெளியான முக்கிய அறிவிப்பு இதோ!