Tamilnadu
தண்ணீர் தொட்டியில் மூழ்கிய குழந்தை.. விளையாடிக் கொண்டிருக்கும் போது நேர்ந்த அவலம்.. சேலத்தில் சோகம் !
சேலம் மாவட்டம் தலைவாசல் பகுதி அருகேயுள்ள கோவிந்தம்பாளையம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ்குமார் - தமிழ் பிரியா தம்பதியினர். சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான இவர்களுக்கு தற்போது சாத்விக் என்ற 2 வயது ஆண் குழந்தை ஒன்று உள்ளது.
இந்த நிலையில் சம்பவத்தன்று மாலை குழந்தை வீட்டில் விளையாடிக் கொண்டிருக்கும்போது, தண்ணீர் தொட்டி அருகே சென்றுள்ளது. அப்போது கால் இடறி தண்ணீர் நிரம்பியிருக்கும் தொட்டிக்குள் விழுந்துவிட்டது. இதையடுத்து குழந்தையின் அலறல் சத்தத்தை கேட்டு அங்கு வந்த பெற்றோர் உடனடியாக குழந்தையை மீட்டனர்.
மேலும் அக்கம்பக்கத்தினர் உதவியோடு குழந்தையை ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். மருத்துவமனையில் குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை ஏற்கனவே மூச்சுத்திணறி இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனைக்கேட்டு அதிர்ந்த பெற்றோர் கதறி அழுதனர்.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து காவல்துறைக்கு அளிக்கப்பட்ட தகவலின் பேரில் குழந்தையின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பினர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விளையாடிக் கொண்டிருக்கும் போது தவறுதலாக தண்ணீர் தொட்டியில் விழுந்த 2 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“இந்த மாதிரி கோமாளி கூட்டத்தோடலாம் நாம சண்டைபோட வேண்டியிருக்கு...” - துணை முதலமைச்சர் கலகல பேச்சு!
-
“தமிழே” என்று அழைத்திடும்போது கிடைத்திடும் இன்பம் மகத்தானது : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
654 அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகளில் உயர்தொழில்நுட்ப ஆய்வகங்கள் : மாணவர்களுக்கு AI பயிற்சி!
-
சட்டமன்றத் தேர்தல் : கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த 7 பேர் கொண்ட குழு -தி.மு.க அறிவிப்பு!
-
“இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்குமான குரல் இது...” : முரசொலி தலையங்கம் !