Tamilnadu

டிப்டாப் உடை.. ஆண்போல வேடமிட்டு குட்கா கடத்திய இளம் பெண் - சினிமா பாணியில் மடக்கி பிடித்த போலிஸ்!

கர்நாடகா மாநிலத்திலிருந்து தருமபுரி மாவட்டம் வழியாக சேலம், ஈரோடு, கோவை, கேரளா உள்ளிட்ட பகுதிகளுக்கு அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா அதிகளவில் கடத்தப்படுகிறது. இதனை தடுக்க மாவட்ட எல்லைகளில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுப்பட்டு வருகின்றனர். அதனையும் மீறி குட்கா கடத்தலில் ஈடுப்படுபவர்கள் பல்வேறு நூதன முறையில் குட்கா கடத்தி செல்கின்றனர்.

இந்நிலையில் தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த கும்பாரஹள்ளி சோதனை சாவடியில் காரிமங்கலம் காரிமங்கலம் காவல் துறையினர் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் மணிவண்ணன் தலைமையில் வாகன சோதனையில் ஈடுப்பட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒருவர் டிப்டாப்பாக உடை அணிந்து, மினிசரக்கு வாகனத்தை ஓட்டி வந்தார்.

சந்தேகத்தின் பேரில் அந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்த போது அந்த வாகத்தை ஓட்டி வந்த ஓட்டுனரிடம் விசாரணை செய்த போது பெண் குரல் போன்று இருந்தது. பிறகு தீவிரமாக விசாரணை செய்த போது வாகனத்தை ஓட்டி வந்தவர் ஆண் இல்லை பெண் என்பவது தெரியவந்தது.

அதனை தொடர்ந்து அந்த பெண் கர்நாடக மாநிலம் பெங்களூருவிலிருந்து சேலத்திற்கு தம்ழக அரசால் தடை செய்யபட்ட 900 கிலோ குட்கா கடத்தி செல்வது தெரியவந்தது, இதனையடுத்து ஆண்வேடம் அணிந்து வாகனத்தை ஓட்டி வந்தவர் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த ஈஸ்வரி 36 என்பரை கால் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகினற்னர். கடத்தி வரப்பட்ட குட்காவை பறிமுதல் செய்து மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய மினிசரக்கு வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.

Also Read: ராமராஜ்யத்தின் டிரைலரே மோசமானதாக இருந்தால், திரைப்படம் எவ்வளவு கொடுமையாக இருக்கும் - சுப.வீரபாண்டியன் !