Tamilnadu
செல்போன் வாங்கி தர மறுத்து கண்டித்த கணவர்.. மன உளைச்சலில் விபரீத முடிவு எடுத்த மனைவி!
காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூர் அடுத்த படப்பை பெரியார் காலணியில் வசித்து வருபவர் முருகன். இவர் கார்பெண்டர் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி சரஸ்வதி (26). இவர்களுக்கு 5 வயது ஒரு மகன் உள்ளார்.
இந்நிலையில், சரஸ்வதி தன் கணவரிடம் தொடர்ந்து செல்போன் வாங்கி தரச் சொல்லி வற்புறுத்தியுள்ளார். கணவர் செல்போன் வாங்கி தர மறுத்து தகாத வார்த்தையில் திட்டி விட்டு, வீட்டை விட்டு வெளியேறி சிறிது நேரம் கழித்து வீட்டுக்கு வந்து பார்த்த பொழுது பெட் ரூம் உள்ளே தாலிட்டு இருந்துள்ளது.
கதவை வேகமாக தட்டியும் கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த முருகன் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து, உள்ளே சென்று பார்த்த பொழுது சரஸ்வதி மின்விசிறியில் தனக்குத்தானே தூக்கிட்டு தொங்கிய நிலையில் இருந்துள்ளார்.
உடனே அவரை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே சரஸ்வதி இறந்து விட்டதாக கூறியுள்ளார். தகவல் அறிந்து விரைந்து சென்ற மணிமங்கலம் காவல்துறையினர் உடலை கைப்பற்றி, உடற்கூறி ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மேலும் கணவரிடம் செல்போன் கேட்டு வாங்கி தர மறுத்ததால் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
குடும்ப விவகாரம் அல்லது வேறு ஏதேனும் பிரச்சனை காரணமாக, மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக அரசின் சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 எண்ணை அழைத்து, இலவச கவுன்சிலிங் பெறலாம்.
Also Read
-
காசா நகரின் 40% பகுதிகளை கைப்பற்றிவிட்டோம், மீதம் இருக்கும் பகுதி விரைவில்... - இஸ்ரேல் அறிவிப்பு !
-
"தமிழ்நாட்டில் பெயர்களுக்கு பின்னால் சாதி இல்லை, பட்டம்தான் உள்ளது" - துணை முதலமைச்சர் உதயநிதி பெருமிதம்!
-
“நம்முடைய அடையாளத்தை ஒருபோதும் மறக்கக் கூடாது” - இங்கிலாந்து வாழ் தமிழர்கள் சந்திப்பில் முதலமைச்சர்!
-
இனி பாதுகாப்பாக பயணம் செய்யலாம்... பொது மக்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு திட்டம் விரைவில் அமல் !
-
சென்னை மெட்ரோவில் பயணம் செய்பவரா ? - ரயில் சேவை நேரத்தில் மாற்றம் செய்து மெட்ரோ ரயில் நிர்வாகம் உத்தரவு !