Tamilnadu
வேலைதேடி வரும் பெண்களே குறி.. வீட்டில் தங்கவைத்து பாலியல் தொழிலில் ஈடுபட வைத்த தம்பதி: விசாரணையில் பகீர்!
சென்னை அடுத்த திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது அப்பர் நகர். இப்பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார். இவரது மனைவி சரளா. இந்த தம்பதிகள் பெண்களை வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலுக்கு ஈடுபடுத்துவதாக போலிஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து வண்ணாரப்பேட்டை போலிஸார் தனிப்படை அமைத்து விசாணை செய்ததில் திடுக்கிடும் தகவல் வெளிவந்துள்ளது. மேலும் போலிஸார் தம்பதி வீட்டில் சோதனை மேற்கொண்டதில் இரண்டு பெண்களை வைத்து கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்தது தெரியவந்தது.
இந்த தம்பதி, வெளியூரில் இருந்து சென்னைக்கு வேலை தேடிவரும் பெண்களைக் குறிவைத்து தனியார் நிறுவனங்களில் வேலை வேலை வாங்கி தருவதாக ஆசைவார்த்தைகளைக் கூறி, பின்னர் அவர்களை கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்துள்ளனர்.
இந்த தம்பதியிடம் இருந்த இரண்டு பெண்களை போலிஸார் மீட்டு அரசு காப்பக்காத்தில் தங்கவைத்துள்ளனர். அவர்கள் குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பின்னர் தம்பதிகளை கைது செய்து இவர்களிடம் இருந்த மூன்று செல்போன்களையும் போலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
வேலை தேடிவரும் வெளியூர் பெண்களை குறிவைத்து தம்பதியினர், கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபட வைத்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
ஒன்றிய அமைச்சர்கள் இல்லாத நாடாளுமன்ற மாநிலங்களவை கூட்டம்! : எதிர்ப்புக்கு பணிந்த ஒன்றிய அரசு!
-
திருப்பரங்குன்றம் - அதிகாரக் குரலில் நீதிமன்றங்களுக்கு உத்தரவிடும் மோகன் பகவத் : மு.வீரபாண்டியன் கண்டனம்!
-
“2026 வெற்றிக்கு அடித்தளமாக ‘இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு’ அமையும்!” : துணை முதலமைச்சர் உதயநிதி அழைப்பு!
-
திராவிட மாடலில் ‘மிளிரும் மகளிர்!’ : மகளிருக்காக செயல்படுத்தப்படும் திட்டங்களின் பட்டியல் உள்ளே!
-
2-ம் கட்ட கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விரிவாக்கம்.. விடுபட்ட மகளிர் வங்கிகளில் ரூ.1000 வரவு!