Tamilnadu
பள்ளி குழந்தை ஷூவில் குடியிருந்த நாக பாம்பு: வீட்டை சுத்தம் செய்த பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி!
கடலூரில் உள்ள ஸ்டேட் பேங்க் காலனி தெருவில் வசிக்கும் அசோகன் என்பவர் வீட்டில் ஆயுத பூஜையொட்டி சுத்தம் செய்யும் பணியில் ஈடுப்பட்டுள்ளார். அப்போது அவரது குழந்தைகளின் பள்ளி ஷூவினை (காலணி)சுத்தம் செய்யும் போது ஷூவில் குட்டி பாம்பு புகுந்து இந்ததை கண்டு அதிர்சசி அடைத்தார்
பின்னர் கடலூரில் உள்ள பாம்புபிடி வீரர் செல்லா அவர்களுக்கு தகவல் கொடுத்ததின் பேரில் பாம்புபிடி வீரர் செல்லா சம்பவ வீட்டிற்ககு சென்று ஷூவில் இருந்த குட்டி நாக பாம்பை பத்திரமாக மீட்டு அருகாமையில் உள்ள காப்பு காட்டில் விட்டார்.
இனி மழை என்பதால் பாம்புகள் வீடுகளை நோக்கி படையெடுக்கும் குறிப்பாக இது போல் காலணிகளில் புகுந்து கொள்ளும் எனவே பெற்றோர்கள் அலட்சியாக இருக்காமால் நாள் தோறும் குழந்தைகளின் காலணிகளை கவனித்து போட்டு விடவேண்டும் என அறிவுறுத்தினார்.
குட்டி நாக பாம்பாக இருந்தாலும் அதை பாம்புபிடி வீரர் பிடிக்க முற்பட்டபோது படம் எடுத்து ஆடியதை பார்ப்பதற்கே நெஞ்சு படபடக்க செய்தது பள்ளிகள் விடுமுறை காலம் என்பதால் நல்வைப்பாக குழந்தை காலணியை பயன்படுத்தாமல் இருந்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது என்பதை குறிப்பிடத்தக்கது.
எனவே பெற்றோர்கள் தாங்கள் மட்டும் கவனமாக இருப்பது மட்டுமல்லாமல் பிள்ளைகளுக்கும் இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
Also Read
-
”உண்மையான மக்கள் தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்” : பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் புகழாரம்!
-
முதலமைச்சர் சொன்னதை வழி மொழியும் இரண்டு நீதியரசர்களின் குரல்கள் : முரசொலி!
-
குஜராத் நீதிபதியை உச்சநீதிமன்ற நீதிபதியாக்க கொலிஜியம் உறுப்பினர் எதிர்ப்பு... காரணம் என்ன ?
-
உங்களுடன் ஸ்டாலின் : மனுக்களை அளிக்க வந்த பொதுமக்கள்... கலந்துரையாடி, தீர்வுகளை வழங்கிய துணை முதலமைச்சர்!
-
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் 1,02,061 நபர்களுக்கு வேலை வாய்ப்பு - அமைச்சர் தா.மோ.அன்பரசன் !