Tamilnadu
பள்ளி சிறுவர்களை துரத்தி துரத்தி கொட்டிய காட்டு தேனீக்கள்.. 60 பேர் படுகாயம்.. கிருஷ்ணகிரியில் சோகம் !
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த மத்தூர் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் இயங்கி வரும் கலைமகள் கலாலயா என்ற தனியார் பள்ளியில் 1000-க்கு மேற்பட்ட மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த பள்ளியில் படிக்கும் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டன. இந்த வகுப்பு முடித்து மாலை நேரத்தில் மாணவர்கள் மைதானத்தில் விளையாடிக்கொண்டிருந்தபோது திடீரென்று வேகமாக காற்று வீசியதாக கூறப்படுகிறது.
இதில் அங்கிருந்த மரம் ஒன்றில் இருந்த தேனீக்களின் கூட்டம் கலைந்து, அங்கு விளையாடிக்கொண்டிருந்த மாணவர்களை கொட்டத்தொடங்கியுள்ளது. இதில் அலறியடித்து ஓடிய மாணவர்களில் பலருக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மேலும் ஓடிய மாணவர்களை விரட்டி விரட்டி தேனீக்கள் கொட்டியுள்ளது.
இதையடுத்து மாணவர்களை மீட்ட பள்ளி நிர்வாகம் உடனடியாக அவர்களை அழைத்துக்கொண்டு அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த காட்டுத்தேனீ தாக்குதலில் சுமார் 60-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகாயம் அடைந்து தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
தெருநாய் விவகாரத்தில் தமிழ்நாடு அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன... முழு விவரம் உள்ளே !
-
”ஓராண்டில் 15,500 பேர் மலையேற்றம்” : சுற்றுலாத்துறையில் முன்மாதிரியாக திகழும் தமிழ்நாடு!
-
கல்லறைத் தோட்டங்கள் - கபர்ஸ்தான்கள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கிய ஆணை என்ன?
-
தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் - நகர் ஊரமைப்பு இயக்ககம்: பணி நியமன ஆணைகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
-
”நெல் போக்குவரத்து ஒப்பந்த விதிகளின்படி முறையாகச் செய்யப்பட்டுள்ளது” : சக்கரபாணி அறிக்கை!