Tamilnadu
“காந்தியை கொலை செய்ததே கோட்சே கும்பல்தான்.. RSS பேரணிக்கு அனுமதி மறுத்தது சரிதான்” : CPIM தலைவர் தாக்கு!
அக்டோபர் 2 மகாத்மா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை தியாகராஜா நகர் பகுதியில் அமைந்துள்ள டக்கர் பாபா வித்யாலயா பள்ளியில் அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டு கழகம் சார்பில் மறைந்த மகாத்மா காந்தியின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யும் நிகழ்வு நடைபெற்றது.
இந்த நிகழ்வின் பொழுது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், காங்கிரஸ் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பலராமன், சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் பொதுச் செயலாளர் மருத்துவர் ரவீந்திரநாத் உட்பட பலர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வின் பொழுது தேச ஒற்றுமையை பாதுகாப்போம் மத நல்லிணக்கத்தை பாதுகாப்போம் என்று உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். இந்த நிகழ்வின் பொழுது செய்தியாளர்களை சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் கூறுகையில், “காந்தி பிறந்த நாள் அக்டோபர் 2 நாடு முழுவதும் அவருக்கு மரியாதை செலுத்தக்கூடிய நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் அமித்ஷாவின் கீழ் நடைபெற்று வரக்கூடிய மத்திய அரசாங்கம் விளிம்பு நிலையும் கீழான ஜனநாயகம், மத சார்பின்மை, கூட்டாட்சி, பொருளாதார இறையாண்மை ஆகிய நான்கு தூண்களையும் தகர்த்து வருகிறது.
காந்திஜியை படுகொலை செய்தது கோட்சே கும்பல். கோட்சேவின் இளைய சகோதரன் கோபாலகோட்சே கோட்சே ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சேர்ந்தவர் தான் என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில், கோட்சேவின் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு மத்தியில் ஆளுகிறது.
இந்த நிலையில், அவர்களே காந்தியின் பிறந்தநாளுக்கு காவல்துறையிடம் அனுமதி கேட்டு, அதை காவல்துறை மறுத்து இருப்பது சரியான விஷயம் தான். வருகின்ற 11ஆம் தேதி தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மதச்சார்பற்ற கட்சிகளும் இணைந்து சமூக நல சங்கத்தை பாதுகாக்க கூடிய மனித சங்கிலி போராட்டம் நடைபெற உள்ளது.” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
ஆதவ் அர்ஜுனாவின் கிளி ஜோசியத்திற்கு பதில் சொல்ல முடியாது : அமைச்சர் ரகுபதி பதிலடி!
-
வாடகை வீட்டில் பெண்களுக்கு Scan.. கருவின் பாலினம் குறித்து கூறி வந்த பெண் உள்பட 3 பேர் சேலத்தில் கைது!
-
தூயமல்லி அரிசி மற்றும் கவுந்தபாடி நாட்டு சர்க்கரைக்கு புவிசார் குறியீடு அறிவிப்பு!
-
“சிகிச்சை அளிக்க மறுத்தால் நடவடிக்கை” : தனியார் மருத்துவமனைக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை!
-
உள்ளாட்சிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரம் : ரூ4.12 கோடிக்கு நலத்திட்ட உதவிகள் - முதலமைச்சர் அசத்தல்!