Tamilnadu
"அதிமுக கூட்டத்துக்கு இலவசமாக பிரியாணி தரவேண்டும்" -பிரியாணி கடை உரிமையாளரை மிரட்டிய அதிமுக பிரமுகர் !
சென்னை திருவல்லிக்கேணி பகுதி அதிமுக செயலாளராக இருப்பவர் சீனிவாசன். இவர் கடந்த வாரம் அதிமுக சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடத்துவதற்காக அப்பகுதியில் உள்ள பல்வேறு கடைகள் மற்றும் வணிக நிறுவன உரிமையாளர்களிடம் கேட்டு மாமுல் மிரட்டிள்ளார்.
இதேபோல் சென்னை ராயப்பேட்டை ஜானி ஜான் சாலையில் உள்ள பிரபல பிரியாணி கடை எஸ்.எஸ் பிரியாணி கடையில் பொதுக் கூட்டத்திற்காக நிதி உதவி கேட்டுள்ளார்.அப்போது ஆயிரமோ இரண்டாயிரமோ கொடுப்பதாக கடை உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
ஆனால் பொதுக்கூட்டத்திற்கு தேவையான அத்தனை செலவையும் உங்கள் நிறுவனம்தான் ஏற்றுக்கொள்ள வேண்டும் என பிரியாணி கடையின் உரிமையாளரை அதிமுக பிரமுகர் சீனிவாசன் மிரட்டியுள்ளார்.
இதை ஏற்க மறுத்த பிரியாணி கடை உரிமையாளர் மற்றும் கிளை மேலாளரிடம் தொலைபேசியில் மிரட்டும் தொனியில் திருவல்லிக்கேணி அதிமுக பகுதி செயலாளர் சீனிவாசன் பேசி உள்ளார். இதனை தொடர்ந்து ராயப்பேட்டை எஸ் எஸ் ஹைதராபாத் பிரியாணி கடை சார்பில் சென்னை ஐஸ் அவுஸ் காவல் நிலையத்தில் திருவல்லிக்கேணி அதிமுக பகுதி செயலாளர் சீனிவாசன் மீது புகார் மனோ அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அதிமுக பகுதி செயலாளர் சீனிவாசன் பிரியாணி கடை உரிமையாளரை மிரட்டும் தொலைபேசி ஆடியோ தற்பொழுது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“தவெக ஆட்சிக்கு வந்து 3 மாதம் ஆச்சு.. ஒரு திட்டமும் இல்லை.. நிதியும் ஒதுக்கல” : கே.என்.நேரு காட்டம்!
-
குளோபல் ஸ்போர்ட்ஸ் சிட்டி திட்டம் கைவிட்டது ஏன்? : பேரவையில் உதயநிதி ஸ்டாலின் கேள்வி!
-
திமுக ஆட்சி தொடர்ந்தால் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார இலக்கை அடைந்திருப்போம் - ஆஸ்டின் பதிலடி!
-
”இந்த திட்டத்தில் கை வைத்தால் த.வெ.க அரசின் கதை முடிந்தது” - CPM செயலாளர் பெ.சண்முகம் எச்சரிக்கை!
-
பொய்யிலே பிறந்து... பொய்யிலே புரண்டு... : விஜயின் பொய்களை வெளிச்சம் போட்டு காட்டும் முரசொலி!