Tamilnadu
சாலையில் சென்றபோது திடீரென பற்றி எரிந்த சொகுசு கார்.. நூலிழையில் உயிர் தப்பிய ஓட்டுநர்: நடந்தது என்ன?
காரைக்குடியைச் சேர்ந்தவர் சதீஷ். இவரது சென்னை அடுத்துள்ள நொளம்பூரில் உள்ள அக்கா வீட்டிற்கு வந்துள்ளார். பின்னர் வண்டலூர் செல்வதற்காக இன்று காரில் சதீஷ், பிரதீப் ஆகிய சென்றுள்ளனர். இதையடுத்து திருநீர்மலை அருகே சென்றபோது திடீரென காரின் முன் பகுதியிலிருந்து புகை வந்துள்ளது. இதைப்பார்த்த சதீஷ் உடனே காரை நிறுத்தியுள்ளார்.
பின்னர் இருவரையும் காரை விட்டு இறங்கியுள்ளனர். உடனே சிறிது நேரத்திலேயே கார் முழுவதும் தீ பிடித்து எரிந்துள்ளது. இது பற்றி தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள் கார் முழுமையாக எரிந்து நாசமானது.
இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கார் தீப்பிடித்தற்கான காரணம் என்ன என்பது தெரியவில்லை. சாலையில் சென்று கொண்டிருந்த கார் ஒன்று திடீரென பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“திராவிட இயக்கம் எப்போதும் எழுத்தாளர்களை கொண்டாடும்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
தமிழினப் பெருமைகளை உலகெங்கும் பறைசாற்றும் வகையில் கொண்டாடப்பட்ட பொங்கல் விழா!
-
அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு தொகுப்பூதியம் உயர்வு!
-
கரூர் துயரம் : நாளை விஜய்யிடம் 2 ஆம் கட்ட விசாரணை நடத்தும் சி.பி.ஐ!
-
பிப்.7 ஆம் தேதி திமுக இளைஞர் அணி தென் மண்டல நிர்வாகிகள் சந்திப்பு : தலைமைக் கழகம் அறிவிப்பு!