Tamilnadu
’அயன்’ படத்தையே மிஞ்சிய சம்பவம்.. அதிர்ச்சியடைந்த சென்னை விமானநிலைய அதிகாரிகள்!
சென்னை விமான நிலையத்தில் உள்ள பயணிகள் வருகை பகுதியை, விமான நிலைய ஒப்பந்த பணியாளர்கள் தூய்மைப்படுத்திக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த தொழில் பாதுகாப்புப் படை வீரருக்கு, ல் ஒரு ஒப்பந்த ஊழியர் வைத்திருந்த கிளினிங் மாப் மீது சந்தேகம் ஏற்பட்டது.
இதை அடுத்து பாதுகாப்புப் படை வீரா்,அந்த மாப்பைக் கழட்டிக் காட்டும் படி ஊழியரிடம் கூறியுள்ளார். பின்னர் மாப்பைக் கழட்டியபோது, மாப்பின் கைப்பிடி குழாய்க்குள் இருந்து தங்கப் பசை அடைத்த 10 பாக்கெட்கள் வெளியே வந்து விழுந்தன. இதைப்பார்த்துப் பாதுகாப்புப் படை வீரர் அதிர்ச்சியடைந்தார்.
பின்னர் அந்த அந்த 10 பாக்கெட்களையும் விமான நிலைய பாதுகாப்புப்படை வீரர்கள் பறிமுதல் செய்தனர். அந்த பாக்கெட்களில் மொத்தம் 1.811 கிலோ தங்கப் பசை இருந்தது. அதன் சர்வதேச மதிப்பு சுமார் ரூபாய் 78 லட்சம். மேலும் இந்த சுத்தம் செய்யும் மாப்பில் எப்படித் தங்கப் பசை வந்தது என்பது குறித்து போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
நிதி நிறுவன மோசடி... பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு !
-
அகமதாபாத் விமான விபத்து : விபத்துக்கு விமானிகள் காரணம் என்பதை ஏற்கமுடியாது... விமானிகள் சங்கம் காட்டம் !
-
சிறந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு 36.08 லட்சம் உதவித்தொகை... வழங்கினார் துணை முதலமைச்சர் உதயநிதி!
-
“அதிமுக - பாஜக சதித்திட்டத்தை உணர்ந்து ‘ஓரணியில்’ திரளும் மக்கள்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
-
ஆங்கில வழிக் கல்விக்கு எதிரான தேசிய கல்விக் கொள்கை! : ‘தி இந்து’ தலையங்கம் விமர்சனம்!