Tamilnadu

“RSS ஊர்வலத்துக்கு அனுமதி மறுப்பு : சட்டம் - ஒழுங்கு பிரச்சினை ஏற்படும்” - தமிழ்நாடு அரசு விளக்கம்!

தமிழ்நாட்டில் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ். தலைமையிலான சங்பரிவார் அமைப்புகள் திட்டமிட்ட முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றன. அதன்தொடர்ச்சியான ஆக்டோபர் 2ம் தேதி தமிழ்நாடு முழுவதும் பேரணிச் செல்ல நீதிமன்றம் சென்று அனுமதி கோரியுள்ளது.

அதன்பின்னர் நீதிமன்றமும் ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி வழங்கியது. ஏற்கெனவே தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் தொடர்புடைய நபர்களின் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் அரங்கேறியுள்ளது. இதனால் சட்டம் - ஒழுங்கு பிரச்சினை கருத்தில் கொண்டு ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்திற்கு தடைவிதிக்கவேண்டும் என பல்வேறு சமூக அமைப்புகள் கோரிக்க விடுத்தன.

இதனிடையே பல மாவட்டங்களில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்திற்கு காவல்துறை தடைவித்த நிலையில், தமிழ்நாடு முழுவதும் வரும் 2-ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

மேலும் சட்டம் - ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்பதால் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு அனுமதி மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளதாக என தமிழ்நாடு அரசு விளக்க அளித்துள்ளது.

மேலும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு ஒன்றிய அரசின் தடை எதிரொலியால், தடை உத்தரவை அமல்படுத்தும் விதமாக அரசாணையும் வெளியிட்டுள்ளது. அதில், ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்திற்கு அனுமதி கேட்கப்பட்டுள்ள அதேநாளில் சமய நல்லிணக்க பேரணி என்ற பெயரில் சில அமைப்புகள் அனுமதி கோரியுள்ளன.

எனவே ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட எந்த அமைப்புகளின் ஊர்வலம் மற்றும் கூட்டங்களுக்கு அனுமதி அளிக்க இயலாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய சட்டம்-ஒழுங்கு சூழலில் ஒன்றிய அரசால் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதையும் தெரிவித்துள்ளனர்.

Also Read: “வன்முறையாளர்களை ஒடுக்குவதில் அரசு தயக்கம் காட்டாது” - மதவாத சக்திகளுக்கு முரசொலி பதிலடி !