Tamilnadu
சேலம்: நிலைதடுமாறிய கார்.. ஒரே குடும்பத்தை சேர்ந்த குழந்தை உட்பட 3 பெண்கள் பலி.. அதிகாலையில் நடந்த சோகம்!
சென்னை இராயப்பேட்டையில் வசித்து வருபவர் ஏஜாஸ். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சேலத்தை சேர்ந்த பெண்ணுடன் இவருக்கு திருமணமானது. இந்த நிலையில் அண்மையில் இவருக்கு குழந்தை பிறந்ததால், அந்த குழந்தையை காண ஏஜாஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் காரில் சென்றுள்ளனர்.
பிறகு குழந்தையை பார்த்துவிட்டு மீண்டும் அதே காரில் நேற்று இரவு சென்னைக்கு கிளம்பினர். ஏஜாஸ் ஓட்டி வந்த காரில், ஏஜாசின் தாய் ஹமீம், தங்கை அம்ரின், சித்தி நமீம் அவருடைய மகள் சுபேதா ஆகிய ஐந்து பேர் இருந்துள்ளனர்.
அப்போது உளுந்தூர்பேட்டை புறவழிச்சாலை மாம்பாக்கம் இரயில்வே மேம்பாலத்தில் கார் சென்று கொண்டிருந்தபோது, ஏஜாஸுக்கு தூக்க கலக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது. அந்த சமயத்தில் அவர் தான் ஓட்டி வந்த காரை அங்கிருந்த தடுப்புக்கட்டையில் மோதியுள்ளார். இதை கார் நிலைதடுமாறி சுமார் 20 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது.
பள்ளத்தில் விழுந்த காரில் இருந்த ஏஜாஸின் தாய் ஹமீம், அம்ரின், சுபேதா ஆகிய மூன்று பேரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதையடுத்து தகவலறிந்து வந்த மீட்பு படையினர் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த ஏஜாசையும், சித்தி நவீமையும் மீட்டு விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
மேலும் சம்பவ இடத்தில் பலியானவர்களின் உடலையும் மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்ததோடு, இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்தால் உளுந்தூர்பேட்டை - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற உளுந்தூர்பேட்டை காவல் நிலைய போலீசார், விபத்துக்குள்ளான காரை கிரேன் மூலம் மீட்டு வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
குழந்தையை பார்த்துவிட்டு வீடு திரும்பிய போது நடந்த இந்த கோர விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“74,168 விவசாயிகளுக்கு குறைந்தபட்ச மானிய விலை (MSP) நிதி வழங்காதது ஏன்?” : திருச்சி சிவா எம்.பி கேள்வி!
-
“அரசியலமைப்புப்படி வழங்க வேண்டிய 27% இடஒதுக்கீடு எங்கே போனது? இதுதான் சமூக நீதியா?” : பி.வில்சன் எம்.பி!
-
தமிழ்நாடு விளையாட்டு மாநாடு 2.0 - 2025 தொடக்கம்! : முழு விவரம் உள்ளே!
-
“பா.ஜ.க.வின் பழிவாங்கும் நோக்கம் அம்பலமாகியுள்ளது!”: ‘நேஷனல் ஹெரால்டு’ வழக்கு குறித்து முதலமைச்சர் பதிவு!
-
தி.மு.கழக மகளிர் அணியின் ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ மாநாடு! : எங்கு? எப்போது?