Tamilnadu
பேரனுக்கு நீச்சல் கற்றுக் கொடுத்த தாத்தாவுக்கு நேர்ந்த கொடூரம்.. உறவினர்கள் அதிர்ச்சி!
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே கீழப்பாவூர் கீரை தோட்ட தெருவைச் சேர்ந்தவர் சுடைலையாண்டி இவரது பேரன் அஸ்வின் (8). 3 ஆம் வகுப்பு படிக்கும் பேரனுக்கு நீச்சல் கற்றுக்கொடுக்க சுடைலையாண்டி முடிவு செய்துள்ளார்.
இதையடுத்து பேரனை கீழப்பாவூர் உள்ள பெரிய குளத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு சிறுவன் முதுகில் காலி பிளாஸ்டிக் கேன் கட்டி நீச்சல் கற்றுக் கொடுத்துள்ளார். அப்போது திடீரென இந்நிலையில் சிறுவனின் முதுகில் கட்டி இருந்த காலி பிளாஸ்டிக்கேன் கழன்று விழுந்துள்ளது
இதனால் சிறுவன் தண்ணீரில் தத்தளித்துள்ளார். இதையடுத்து பேரனை சுடைலையாண்டி கரையில் சேர்க்க முயன்றபோது நீரில் மூழ்கியுள்ளார். இதைப்பார்த்த பொதுமக்கள் உடனே தீயணைப்புத் துறைக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.
பிறகு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சிறுவனைப் பத்திரமாக மீட்டனர். ஆனால் பல மணி நேரம் தேடுதலுக்குப் பிறகு சுடைலையாண்டியை சடலமாக மீட்டனர். இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பேரனுக்கு நீச்சல் கற்றுக் கொடுத்த தாத்தா குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் கீழ்பாவூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
Also Read
-
ஒன்றிய அமைச்சர்கள் இல்லாத நாடாளுமன்ற மாநிலங்களவை கூட்டம்! : எதிர்ப்புக்கு பணிந்த ஒன்றிய அரசு!
-
திருப்பரங்குன்றம் - அதிகாரக் குரலில் நீதிமன்றங்களுக்கு உத்தரவிடும் மோகன் பகவத் : மு.வீரபாண்டியன் கண்டனம்!
-
“2026 வெற்றிக்கு அடித்தளமாக ‘இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு’ அமையும்!” : துணை முதலமைச்சர் உதயநிதி அழைப்பு!
-
திராவிட மாடலில் ‘மிளிரும் மகளிர்!’ : மகளிருக்காக செயல்படுத்தப்படும் திட்டங்களின் பட்டியல் உள்ளே!
-
2-ம் கட்ட கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விரிவாக்கம்.. விடுபட்ட மகளிர் வங்கிகளில் ரூ.1000 வரவு!