Tamilnadu
செல்போனில் பேசியதால் திட்டிய தந்தை.. விபரீத முடிவெடுத்த கல்லூரி மாணவி!
ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமணன். இவரது மகள் கீர்த்தனா. இவர் நம்பியூரில் உள்ள அரசு கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
இந்நிலையில் கல்லூரி விடுமுறைக்காக கீர்த்தனா வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அவர் செல்போனில் யாரிடமோ பேசிக் கொண்டிருந்தார். இதைப்பார்த்த அவரது தந்தை மகளைத் திட்டி அவரிடம் இருந்து செல்போனை வாங்கிக் கொண்டு சென்றுள்ளார்.
இதனால் மன வேதனையடைந்த கீர்த்தனா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது பற்றி தகவல் அறிந்து வந்த போலிஸார் அவரது உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இந்த தற்கொலை குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தந்தை திட்டியதால் மகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“தி.மு.க முப்பெரும் விழா ஒத்திவைக்கப்படுகிறது!” : கழகப் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு!
-
“பேரறிஞர் அண்ணா என்றும் நம்மை வழிநடத்துவார்! வாழ்க அண்ணாவின் புகழ்!” : எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி!
-
திணிக்கப்பட்ட இடைத்தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுங்கள்! - முரசொலி தலையங்கம்!
-
“தமிழ்நாட்டின் அரசியல் இலக்கணத்தை எழுதிய பேரறிஞர் அண்ணாவுக்குப் புகழ் வணக்கம்!” : மு.க.ஸ்டாலின்!
-
ஜனநாயகத்தின் குரல்வளையை தன் பூட்ஸ் காலால் நெறிக்கும் த.வெ.க அரசு : தி.மு.க ஆவேசம்!