Tamilnadu
பதிவுத்துறையில் ரூ.8000 கோடி வருவாய்.. அடுத்தடுத்து பதிவுத்துறையில் சாதனை படைத்து வரும் தமிழ்நாடு அரசு!
தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசு அமைந்ததிலிருந்து பல்வேறு துறைகள் கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் கூடுதலாக வளர்ச்சியடைந்துள்ளது.
குறிப்பான கல்வி, பெண்கள், வேலைவாய்ப்பு போன்றவற்றிற்குக் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு புதிய புதிய திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளது. அதேபோல் கடந்த அ.தி.மு.க ஆட்சியிலிருந்ததுபோல் இல்லாமல் தி.மு.க ஆட்சியில் பதிவுத்துறை பல சாதனைகளைப் படைத்து வருகிறது.
இந்நிலையில் பதிவுத்துறையில் வருவாய் ரூ. 8 ஆயிரம் கோடியைக் கடந்ததுள்ளதாக வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி. மூர்த்தி தெரிவித்துள்ளார். இது குறித்து அமைச்சர் பி.மூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-
பதிவுத்துறையில் அறிமுகப்படுத்தப்பட்டுவரும் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளின் காரணமாக ஆவணங்கள் பதிவு அதிகரித்து அதன் மூலம் அரசுக்கு வரி வருவாயும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
பதிவு செய்ய வருவோரை ஆதார் எண் மூலம் சரி பார்த்தல், வரிசைக் கிரம டோக்கன் முறை, சரியான நிலமதிப்பு நிர்ணயம், மூத்த குடிமக்களுக்கு முன்னுரிமை போன்ற பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளின் காரணமாக பொதுமக்கள் பதிவு சேவைக்காக இத்துறையை நம்பிக்கையோடு நாடுகின்றனர்.
அனைத்திற்கும் மேலாக கடந்த காலங்களில் நடந்த மோசடி பதிவுகளின் மீது விரிவான விசாரணை மேற்கொண்டு, போலி ஆவணப் பதிவுகளை பதிவுத் துறையே ரத்து செய்யும் அதிகாரம் நடைமுறைப்படுத்துவதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்வரும் 28.09.2022 ஆம் தேதி துவக்கி வைக்க இருக்கிறார்கள்.
இந்த பல்வேறு முன்னோடி முயற்சிகளின் விளைவாக கடந்த 21.09.2022 வரை 16,59,128 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டு ரூபாய் 8,082 கோடி வருவாயாக ஈட்டப்பட்டுள்ளது, இது கடந்த ஆண்டில் இதே நாளில் எட்டப்பட்ட ரூபாய் 5,757 கோடியை விட ரூபாய் 2,325 கோடி அதிகமாகும்.
இவ்வாறு அமைச்சர் பி. மூர்த்தி தெரிவித்துள்ளார்.
Also Read
-
தெருநாய் விவகாரத்தில் தமிழ்நாடு அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன... முழு விவரம் உள்ளே !
-
”ஓராண்டில் 15,500 பேர் மலையேற்றம்” : சுற்றுலாத்துறையில் முன்மாதிரியாக திகழும் தமிழ்நாடு!
-
கல்லறைத் தோட்டங்கள் - கபர்ஸ்தான்கள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கிய ஆணை என்ன?
-
தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் - நகர் ஊரமைப்பு இயக்ககம்: பணி நியமன ஆணைகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
-
”நெல் போக்குவரத்து ஒப்பந்த விதிகளின்படி முறையாகச் செய்யப்பட்டுள்ளது” : சக்கரபாணி அறிக்கை!