Tamilnadu

"இந்திய அளவில் தமிழ்நாட்டில் விலைவாசி கட்டுக்குள் உள்ளதற்கு இதான் காரணம்": ஜெயரஞ்சன் சொன்னது என்ன?

பொது விநியோக திட்டத்தை தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்படுத்தி வருவதால் தமிழ்நாட்டில் விலைவாசி கட்டுக்கள் உள்ளது என திட்டக்குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன் தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஜெயரஞ்சன், "வட மாநிலங்களில் விலைவாசி உயர்வு 27% வரை இருக்கும் நிலையில் தமிழ்நாட்டில் 4 % அளவில் குறைவாக உள்ளது.

பொது விநியோகத் திட்டத்தை தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்படுத்திவருகிறது. இத்திட்டங்களுக்கு ஆண்டுக்கு சுமார் 7 ஆயிரம் 500 கோடி ரூபாய் அரசு செலவு செய்கிறது. தானியங்களின் விலையேற்றம் 2.7% ஆக தான் உள்ளது. தமிழ்நாட்டில் சிறப்பு பொதுவிநியோக திட்டம் மூலம் பாமாயில் துவரம் பருப்பு வழங்கப்படுகிறது.

மேலும், சிறப்பு பொது விநியோக திட்டத்தின் மூலம் துவரம் பருப்பு, பாமாயில் வழங்கப்படுவதால் தமிழ்நாட்டில் உணவு பொருட்களின் விலையேற்றம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.ஒன்றிய அரசு குறைவான விலையில் பொது விநியோக திட்டத்திற்கான பொருட்களை வழங்கினால் இன்னும் கூடுதலான மக்கள் பயன் அடைவார்கள்" என தெரிவித்துள்ளார்.

Also Read: தென்மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடம்.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு மற்றுமொறு மகுடம்!