Tamilnadu
‘குப்பைகளிடம் என்ன எதிர்பார்க்க முடியும்’:தாய்மாமன் ராகுல்.. கொச்சைப்படுத்திய பாஜக நிர்வாகி-கோபப்பட்ட PTR
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்.பி-யுமான ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை 'இந்திய ஒற்றுமை பயணம்' பாதயாத்திரையை 150 நாட்கள் 12 மாநிலங்களில் மேற்கொள்கிறார். குமரியில் தொடங்கிய இந்த பாதயாத்திரை தற்போது கேரள மாநிலத்தில் நடைபெற்று வருகிறது. கேரள மாநிலத்தில் 19 நாட்கள் நடைபயணம் மேற்கொள்ளவிருக்கும் ராகுல் காந்திக்கு அங்குள்ள மக்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.
இருப்பினும் ராகுல் காந்தியின் நடைபயணத்தையும், அவர் அணிந்திருந்த டிசர்ட், ஓய்வெடுக்கும் கேரவன் உள்ளிட்டவற்றை பற்றி கடுமையாக விமர்சித்து வருகிறது பா.ஜ.க. இந்த நிலையில் தமிழ்நாடு பா.ஜ.க-வின் தகவல் மற்றும் தொழில்நுட்ப பிரிவு (IT WING) தலைவர் சிடிஆர். நிர்மல் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் ராகுல் காந்தியின் ஒரு புகைப்படத்தைப் பதிவிட்டு சர்ச்சைக்குரிய பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் ராகுல் காந்தி ஒரு சிறுமியுடன் அமர்ந்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், "குழந்தைகளுடன் மருதாணி வைத்து விளையாடும் இவரை கூட்டிக்கொண்டு யாத்திரை போகும் அந்த 10 பேரை நினைத்தால் தான் பாவமாக இருக்கிறது" என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த பதிவை உண்மைச் செய்திகளைக் கண்டறிந்து வெளியிடும் ஆல்ட் நியூஸின் இணை நிறுவனரும் பத்திரிகையாளருமான முகமது ஜுபைர், அந்த புகைப்பட பதிவு குறித்த உண்மைகளை கண்டறிந்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், "ராகுல் காந்தி தனது மருமகள் மீராயா வாத்ராவுடன் பாசமாக இருக்கும் பழைய படத்தை பா.ஜ.க தலைவர் ஒருவர் பகிர்ந்து, ராகுல் காந்தி சிறு குழந்தைகளுடன் இருப்பதாக அந்த தலைவர் குறிப்பிட்டுள்ளார். அந்தப் புகைப்படத்தில் ராகுல் காந்தி, தனது சகோதரி பிரியங்காவின் மகள் மிராயா வத்ராவுடன் பேசிக் கொண்டிக்கிறார். அந்த புகைப்படம் 2015ஆம் ஆண்டு ராஜீவ் காந்தியின் நினைவிடத்தில் எடுக்கப்பட்டது" என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆல்ட் நியூஸ் நிர்வாகி வெளியிட்ட பதிவு பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியதால் மாமன் - மருமகள் உறவை பா.ஜ.க-வினர் கொச்சை படுத்துவதாக கூறி காங்கிரஸ் கட்சியினர் கண்டனம் தெரிவித்து வந்தனர். மேலும் இவரது பதிவு அதிர்வலையை ஏற்படுத்தியதால், மேலும் பிரச்னைகள் எழும் என்று நினைத்த பா.ஜ.க ஐடி விங் தலைவர், தனது பதிவை நீக்கி, அதே புகைப்படத்தை மீண்டும் பகிர்ந்து 'ஆச்சர்யம் படுவது போன்ற ஒரு எமோஜி'-யுடன் மீண்டும் பதிவிட்டுள்ளார்.
இந்த நிலையில், அவரது பழைய பதிவு மற்றும் புது பதிவு இணையத்தில் வைரலானதையடுத்து தமிழ்நாடு நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், முகமது ஜுபைரின் ட்விட்டை மேற்கோள் காட்டி பா.ஜ.க-வை கடுமையாக விமர்சித்துள்ளார்.
அமைச்சர் பிடிஆர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "துரதிர்ஷ்டவசமாக, பெண்களைப் பற்றி கீழ்த்தரமான எண்ணங்களைக் கொண்ட வாய் வழியாக உணவைச் சாப்பிடாதவர்களிடம் இருந்து இதுபோன்ற குப்பைகளைத் தவிர வேறு எதையும் நாம் எதிர்பார்க்க முடியாது.
இந்த அருவருப்பான கருத்துகளை தெரிவிப்பதற்காக தமிழ்நாடு பா.ஜ.க, அவருக்கு விருது வழங்கி பெருமைப்படுத்தும். அவர், தனது தலைவகளின் உத்தரவுகளை தானே பின்பற்றுகிறார்" என விமர்சித்து பதிவிட்டிருந்தார். இது தற்போது பெரும் சர்ச்சையாகியுள்ளது.
Also Read
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!
-
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!