Tamilnadu
சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுப்படுத்தி 25 பேர் வன்கொடுமை : தம்பதியினர் உட்பட 27 பேர் கைது - பகீர் தகவல்!
புதுச்சேரி கோரிமேடு மோகன் நகர் பகுதியில் ஒரு வீட்டில் பாலியல் தொழில் நடப்பதாக தன்வந்திரி நகர் காவல் நிலையத்திற்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் ஆய்வாளர் பாலமுருகன், உதவி ஆய்வாளர் ரமேஷ் மற்றும் போலிஸார் அங்கு சென்று சோதனை செய்ததில், கடலூரை சேர்ந்த பாலாஜியும், அவரது மனைவி உமாவும் வீடு வாடகைக்கு எடுத்து 16 வயது சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுப்படுத்தியது கண்டுப்பிடிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுப்படுத்திய பாலாஜியையும், அங்கிருந்த வாடிக்கையாளரான புதுவையை சேர்ந்த பச்சையப்பன் ஆகியோரை போலிஸார் கைது செய்தனர்.
தொடர்ந்து பாலாஜியிடம் நடத்திய விசாரணையில், அவரும் அவரது மனைவியும், சிறுமியை 20 வயது கல்லூரி மாணவி என கூறி பாலியல் தொழிலில் ஈடுப்படுத்தியதியதும், இதுவரை 25 பேர் அந்த சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுப்பட்டது தெரியவந்து.
இதையடுத்து தம்பதியினர் உட்பட 27 பேர் மீது போக்சோ பிரிவின் கீழ் போலிஸார் வழக்குப்பதிவு செய்து, 22 பேரை கைது செய்து நீதிபதி வீட்டில் ஆஜர்ப்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள உமா உள்பட 5 பேரை போலிஸார் தேடி வருகிறார்கள்.
Also Read
-
தெருநாய் விவகாரத்தில் தமிழ்நாடு அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன... முழு விவரம் உள்ளே !
-
”ஓராண்டில் 15,500 பேர் மலையேற்றம்” : சுற்றுலாத்துறையில் முன்மாதிரியாக திகழும் தமிழ்நாடு!
-
கல்லறைத் தோட்டங்கள் - கபர்ஸ்தான்கள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கிய ஆணை என்ன?
-
தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் - நகர் ஊரமைப்பு இயக்ககம்: பணி நியமன ஆணைகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
-
”நெல் போக்குவரத்து ஒப்பந்த விதிகளின்படி முறையாகச் செய்யப்பட்டுள்ளது” : சக்கரபாணி அறிக்கை!