Tamilnadu
தி.மு.க முப்பெரும் விழா : முத்தாய்ப்பு விருதுகள், பரிசுகளை வழங்கிச் சிறப்பித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!
திராவிட இயக்கத்தின் வழித் தோன்றல் தந்தை பெரியார் பிறந்த நாள் செப்டம்பர் 17, தி.மு.கழகத்தை தோற்றுவித்த பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் செப்டம்பர் 15. தி.மு.க தோற்றுவிக்கப்பட்ட நாள் செப்டம்பர் 17. இம்மூன்றையும் ஒன்றிணைத்து முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் சீரிய முயற்சியால் “முப்பெரும் விழா”வாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன்படி, விருதுநகரில் கலைஞர் - அண்ணா அரங்கில் கழக முப்பெரும் விழா இன்று நடைபெற்றது. இவ்விழாவில் கழகத் தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு முப்பெரும் விழா விருதுகளை வழங்கினார்.
இந்நிலையில், இவ்விழாவில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் முரசொலியில் உடன்பிறப்புகளுக்குக் எழுதிய கடிதங்களின் 54 தொகுதிகள் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் “திராவிட மாடல் ஆட்சி தொகுப்பு” என்ற நூலை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டு சிறப்பித்தார்.
விருதுகள் பெறுவோர் இம் “முப்பெரும் விழா”வில் முத்தாய்ப்பு விருதுகள் வழங்குவது தான்.
அதன்படி, 1. திருமதி. சம்பூர்ணம் சாமிநாதன் அவர்களுக்கு ‘பெரியார் விருது’ வழங்கிச் சிறப்பித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
2. கோவை திரு. இரா.மோகன் அவர்களுக்கு ‘அண்ணா விருது’ வழங்கிச் சிறப்பித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
3. கழகத்தின் பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி. அவர்களுக்கு ‘கலைஞர் விருது’ வழங்கிச் சிறப்பித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
4. புதுச்சேரி சி.பி.திருநாவுக்கரசு அவர்களுக்கு, ‘பாவேந்தர் விருது’ வழங்கிச் சிறப்பித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
5. குன்னூர் சீனிவாசன் அவர்களுக்கு, ‘பேராசிரியர் விருது’ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கிச் சிறப்பித்தார்.
Also Read
-
’ஓரணியில் தமிழ்நாடு’ : மண், மொழி, மானம் காக்க களத்தில் இறங்கிய தி.மு.க!
-
நீர்நிலைகளை அறிய இணையதள சேவை.. தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! - விவரம் என்ன?
-
சென்னை, தரமணியில் தமிழ் அறிவு வளாகம் : அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
ரூ.52 கோடி செலவில் 208 புதிய நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் - திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அஜித் குமார் மரணம் விவகாரம்: “Sorry மா.. ஒரு 'அப்பாவாக.. ஒரே Phone Call!” - அமைச்சர் TRB ராஜா நெகிழ்ச்சி!