Tamilnadu
வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட குட்டியானை.. வெயில் படாமலிருக்க குடை பிடித்த தமிழக வனத்துறை:நெகிழ்ச்சி VIDEO
நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அப்பகுதியில் உள்ள முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் குட்டி யானை ஒன்று மழை வெள்ளத்தில் அடித்து வரப்பட்டது. அந்த குட்டி யானையை கண்ட அப்பகுதி மக்கள், உடனே வனத்துறையினருக்கு இது குறித்து தகவல் தெரிவித்தனர்.
விரைந்து வந்த அவர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள் உதவியுடன் ஆற்றில் அடித்து வரப்பட்ட குட்டியானையை பத்திரமாக மீட்டனர். மேலும் குட்டியை அதன் தாயுடன் சேர்க்கும் பண்ணிக்காக 8 குழுக்களாக பிரிந்து வாழைத்தோட்டம், ஆனைக்கட்டி உள்ளிட்ட பகுதிகளில் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். அப்போது அங்கிருக்கும் ஒரு பகுதியில் யானைகள் கூட்டம் இருப்பதை கண்ட வனத்துறை அதிகாரிகள் அந்த குட்டி யானையை அதன் தாயுடன் சேர்த்து வைத்தனர்.
இந்த நிலையில், தற்போது குட்டி யானையை காப்பாற்றிய வனத்துறை அதிகாரிகளில் ஒருவர் குட்டியை தாயுடன் இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்த போது அந்த குட்டி யானை தூங்கி கொண்டிருந்த சமயத்தில் அதற்கு வெயில் படாமல் இருப்பதற்காக வனத்துறை அதிகாரி ஒருவர் குடை பிடித்து நிற்கிறார்.
இது தொடர்பான வீடியோவை சுற்றுச்சூழல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாகு, தனது ட்வீட்டர் பக்கத்தில் பகிர்ந்து தமிழ்நாடு வனத்துறையினருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.
Also Read
-
”மாற்றுத்திறனாளிகளின் ஒளிமயமான வாழ்வுக்கு நாம் அனைவரும் பாடுபடுவோம்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“நலம் காக்கும் ஸ்டாலின்” திட்டம் : தமிழ்நாடு முழுவதும் 9,86,732 பேர் பயன்!
-
கனமழையில் இருந்தும் உள்ளூர் மக்களை மட்டுமல்ல; கடல் கடந்து சென்றவர்களையும் காத்த தமிழ்நாடு அரசு : முரசொலி!
-
டிட்வா புயல் : சென்னை கட்டுபாட்டு மையம், புரசைவாக்கத்தில் துணை முதலமைச்சர் ஆய்வு!
-
IT ஊழியர்கள் பணிச்சுமை குறித்த கேள்வி.. ஆய்வுகள் இல்லை என்று சொல்லும் ஒன்றிய அமைச்சர் - சு.வெ. விமர்சனம்!