Tamilnadu
சென்னை வந்த இலங்கை பயணி மயங்கி விழுந்து உயிரிழப்பு.. விமான நிலையத்தில் பரபரப்பு!
இலங்கை நாட்டின் கொழும்பு நகரை சேர்ந்தவர் முகமது பாருக் (57). இவர் இலங்கையில் இருந்து இன்று காலை ஸ்ரீலங்கன் ஏா்லைன்ஸ் விமானத்தில் சென்னை வந்தார். இதையடுத்து முகமது பாருக் விமானத்திலிருந்து இறங்கி, குடியுறிமை, சுங்கம் சோதணைகளை முடித்துவிட்டு விமானநிலையத்திலிருத்து வெளியே வந்தாா். அப்போது அவர் திடீரனெ மயங்கி கீழே விழந்தார்.
இதையடுத்து சக பயணிகள், விமான நிலைய மருத்துவக் குழுவினருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு விரைந்து வந்த மருத்துவ குழுவினா், முகமது பாருக்கை சோதனை செய்தனா். பின்பு அவா் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனா்.
இது தொடர்பாக, சென்னை விமான நிலைய போலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விமானநிலைய போலிஸா விரைந்து வந்து, முகமது பாருக்கின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக குரோம்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
திராவிடம் என்றால் என்ன என்றே தெரியாது என்றவர்தான் எடப்பாடி பழனிசாமி - அமைச்சர் சிவசங்கர் விமர்சனம் !
-
5 நாட்கள் சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்... நிர்வாகம் அறிவிப்பு : விவரம் உள்ளே !
-
தங்கம், வெள்ளி விலை எப்படி நிர்ணயிக்கப்படுகிறது? - தினசரி விலை மாற்றம் ஏன்? : முழுவிவரம் உள்ளே!
-
'பெரியார் உலகம்' பணிக்காக திமுக ரூ.1.70 கோடி நிதி : கி.வீரமணியிடம் வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
உலகப் புத்தொழில் மாநாடு - 2025 மகத்தான வெற்றி : ரூ.127 கோடி முதலீடுகள் ஈர்ப்பு!