Tamilnadu
சினிமா வாய்ப்பு தருவதாக ஆபாச படம்.. ஏமாந்த 100-க்கும் மேற்பட்ட இளம்பெண்கள்.. சிக்கிய மர்ம கும்பல் !
சேலம் மாவட்டம் இரும்பாலை பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் சேலத்தில் உள்ள சினிமா கம்பெனிக்கு வாய்ப்பு கேட்டு சென்றுள்ளார். அங்கு இருந்த வேல்சத்ரியன் (வயது 38) ஜெயஜோதி (வயது23) ஆகியோர் இயக்குநர் எனவும் உதவியாளர் எனவும் அறிமுகப்படுத்தியுள்ளனர்.
பின்னர் அவர்கள் அந்த பெண்ணிடம் அடுத்த படத்தில் வாய்ப்பு கொடுப்பதாகவும், அதற்கு பணம் தர வேண்டும் என்றும் கூறியுள்ளனர். ஆனால் அந்த பெண்ணிடம் பணம் இல்லாததால் அலுவலகத்தில் சம்பளம் கொடுக்காமல் வேலை செய்ய கூறியுள்ளனர்.
இதன் பின்னர் அந்த பெண்ணை ஆபாச படத்தில் நடிக்க வற்புறுத்தவே அந்த பெண் வேலையே விட்டு நின்றுள்ளார். ஆனால் அவர்கள் அந்த பெண்ணின் போனை பறித்துக்கொண்டதால் அதை வாங்க அந்த பெண் மீண்டும் அந்த அலுவலகம் சென்றுள்ளார்.
அப்போது அந்த அலுவலகத்தில் சில இளம்பெண்களை வைத்து அவர்கள் ஆபாசமாக படம் எடுப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துவர் இது தொடர்பாக சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் நடவடிக்கை எடுத்த போலிஸார் சினிமா அலுவலகம் சென்று அங்கிருந்த வேல்சத்ரியன், ஜெயஜோதி ஆகியோரை பிடித்து விசாரித்தனர்.
அப்போது சினிமா ஆசையில் இருக்கும் பெண்களை அழைத்து ஏமாற்றி அவர்களை வைத்து ஆபாசமாக படம் எடுத்தது தெரியவந்தது. மேலும் அங்கிருந்து ஆபாச காட்சிகள் அடங்கிய ஹார்டு டிஸ்குகள், ஆணுறை , லேப்டாப், கேமராக்கள், பென் டிரைவ் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
பின் அவற்றை ஆய்வு செய்ததில் அதில் சுமார் 100 பெண்களின் வீடியோக்கள் இருந்துள்ளது தெரியவந்தது. இதைக் கண்டு அதிர்ச்சிடைந்த போலிஸார் வேல்சத்ரியனிடம் நடத்திய விசாரணையில், சேலம், கோவை, திருப்பூர், கள்ளக்குறிச்சி, சென்னை போன்ற இடங்களை சேர்ந்த பெண்கள் இதில் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்தது.
மேலும் விசாரணையில் தேசிய விருது படம் என்று சொல்லி பெண்களின் பெற்றோரின் சம்மதத்தோடு இளம்பெண்களை ஏமாற்றி அவர்களை வைத்து வீடியோ எடுத்தது தெரியவந்தது. பின் அவர்கள் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்த போலிஸார் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
Also Read
-
ஒன்றிய அமைச்சர்கள் இல்லாத நாடாளுமன்ற மாநிலங்களவை கூட்டம்! : எதிர்ப்புக்கு பணிந்த ஒன்றிய அரசு!
-
திருப்பரங்குன்றம் - அதிகாரக் குரலில் நீதிமன்றங்களுக்கு உத்தரவிடும் மோகன் பகவத் : மு.வீரபாண்டியன் கண்டனம்!
-
“2026 வெற்றிக்கு அடித்தளமாக ‘இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு’ அமையும்!” : துணை முதலமைச்சர் உதயநிதி அழைப்பு!
-
திராவிட மாடலில் ‘மிளிரும் மகளிர்!’ : மகளிருக்காக செயல்படுத்தப்படும் திட்டங்களின் பட்டியல் உள்ளே!
-
2-ம் கட்ட கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விரிவாக்கம்.. விடுபட்ட மகளிர் வங்கிகளில் ரூ.1000 வரவு!