Tamilnadu
15 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை.. இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்த மகிளா நீதிமன்றம்!
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ள மே.குளவாய்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன். இளைஞரான இவர் கடந்த 2021 டிசம்பர் மாதம் அதே பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமியைக் காதலிப்பதாகவும் திருமணம் செய்து கொள்வதாகவும் கூறி இருசக்கர வாகனத்தில் வலுக்கட்டாயமாகக் கடத்திச் சென்றுள்ளார்.
பின்னர் மே. பூதக்குடி செங்கல் சூளை கொட்டகையில் வைத்து பலமுறை வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது குறித்து சிறுமி அவரது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் கண்ணனை போலிஸார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
இந்த வழக்கு புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் வழக்கை விசாரணை செய்த நீதிபதி சத்யா, குற்றம் உறுதி செய்யப்பட்டதால் கண்ணனுக்கு ஆயுள் தண்டனையும் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்துத் தீர்ப்பு வழங்கினார்.
மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்குத் தமிழக அரசு சார்பில் ஐந்து லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கவும் உத்தரவிட்டார். இதனை அடுத்து குற்றவாளி கண்ணன் திருச்சி மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டாடர்.
Also Read
-
மதக் கலவரத்தைத் தூண்டுவதா? - உயர்நீதிமன்ற நீதிபதியே துணை போவதா? : ஆசிரியர் கி.வீரமணி ஆவேசம்!
-
தமிழ்நாட்டை வஞ்சிக்கிற போக்கு தொடருமேயானால்... : ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு செல்வப்பெருந்தகை எச்சரிக்கை!
-
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மீது இம்பீச்மெண்ட் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்: தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்
-
“அமைதியும் எளிமையுமிக்கவர்... திரைப்பாசம் குடும்ப பாசமானது..” - AVM சரவணன் மறைவுக்கு முதலமைச்சர் இரங்கல்!
-
சென்னை மாநகர செரீப்.. எழுத்தாளர்... தயாரிப்பாளர்... பன்முக கலைஞர் AVM சரவணன் காலமானார்!