Tamilnadu
”இரு மாநிலங்களுக்கும் நலன் பயக்கும் திட்டங்கள் குறித்த அறிக்கை”.. கேரள முதல்வரிடம் வழங்கிய முதலமைச்சர்!
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நாளை தென்மண்டல கவுன்சில் கூட்டம் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருவனந்தபுரம் சென்றுள்ளார்.
திருவனந்தபுரம் வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கொட்டும் மழையிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து கோவளத்தில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்தார்.
அப்போது, இரு மாநிலங்களுக்கும் நலன் பயக்கும் திட்டங்கள் குறித்த அறிக்கையைக் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனிடம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். மேலும் The Dravidian Model என்ற புத்தகத்தையும் பரிசாக கொடுத்தார்.
இதையடுத்து திருவனந்தபுரத்தில் நாளை நடைபெறும் தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். இந்த கூட்டத்தில் ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலங்கானா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த முதலமைச்சர்களும் பங்கேற்கின்றனர்.
Also Read
-
“புறமுதுகு காட்டி ஓடுகிறவர்கள் நாங்கள் இல்லை; மக்களோடு மக்களாக இருந்து எதையும் எதிர்கொள்வோம்!” : உதயநிதி!
-
உதயநிதி ஸ்டாலின் விடுவிப்பு... தஞ்சையில் ஆரவாரத்துடன் வரவேற்பு அளித்த தொண்டர்கள் !
-
“கைதுக்கு பயமில்லை... எதுவானாலும் நேருக்கு நேர் சந்திப்பேன்” – கெத்தாக பேட்டியளித்த உதயநிதி ஸ்டாலின்!
-
உதயநிதி ஸ்டாலின் கைது கண்டனத்திற்குரியது.. தவெக அரசு அராஜகம் - அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம்!
-
“காவிரி பிரச்சினையை திசை திருப்ப... உதயநிதியை கைது செய்து அராஜகம்!” : மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!