Tamilnadu
ஒரே ஆண்டில் ரூ.97 லட்சம் மோசடி.. மத்திய கூட்டுறவு வங்கி மேலாளரை பணி நீக்கம் செய்து அதிரடி உத்தரவு !
வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் மத்திய கூட்டுறவு வங்கி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் பயிர்க்கடன், மகளிர் சுய உதவிக்குழு கடன், புதிய தொழில் தொடங்குவதற்கான கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த வங்கியின் கிளை மேலாளராக பணிபுரிந்து வந்தவர் உமா மகேஸ்வரி. இவர் மேல் கடந்த கடந்த 2018-19 ஆண்டு காலத்தில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்கியது போல் போலி ஆவணம் தயாரித்து ரூ.97 லட்சம் மோசடி செய்ததாக புகார் எழுந்தது.
புகாரின் அடிப்படையில் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதில், உமா குற்றவாளி என சந்தேகம் எழுந்தது. இதையடுத்து உமா மகேஸ்வரியை இடைக்கால பணிநீக்கம் செய்து வேலூர் மத்திய கூட்டுறவு பொது மேலாளர் நடவடிக்கை மேற்கொண்டார். பின்னர் இது குறித்து வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இவர் மோசடி செய்தது நிரூபனம் ஆனது.
இதையடுத்து கடந்த ஜூன் மாதம் வேலூர் கூட்டுறவு துணைப்பதிவாளர் அருட்பெருஞ்ஜோதி அளித்த புகாரின்பேரில், வேலூர் வணிக குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிந்து உமாமகேஸ்வரியை கடந்த மே மாதம் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர், அவர் சில நாட்களுக்கு முன்னர் ஜாமீனில் வெளியே வந்தார்.
இந்த நிலையில், சிறையில் இருந்து வெளியே வந்த உமா மகேஸ்வரி ஏற்கனவே சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்த நிலையில், துறை ரீதியான விசாரணை முடிந்து தற்போது டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார்.
Also Read
-
வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் இடம்பெறவில்லையா? : சென்னை மக்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு!
-
சென்னையில் 14.25 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்! : மாவட்ட தேர்தல் ஆணையர் சொல்வது என்ன?
-
சென்னையில் மின்சாரப் பேருந்து பணிமனை: துணை முதலமைச்சர் தொடங்கி வைத்த மின்சார பேருந்துகளின் சிறப்புகள்!
-
பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்க்க தடை விதித்த சென்னை மாநகராட்சி : காரணம் என்ன?
-
VBGRAMG சட்டம் ஒழிக! : ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் அறிவித்த மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணி!