Tamilnadu

ரூ.1 லட்சம் கொடுத்தால் 1 லட்சத்து 60 ஆயிரம் RETURN.. முதலீட்டாளர்களை ஏமாற்றிய பா.ஜ.க பிரமுகர் கைது !

சேலத்தை சேர்ந்த பா.ஜ.க பிரமுகர் பாலசுப்பிரமணியம். இவரும் இவரின் மனைவி தனலட்சுமி மற்றும் மகன் வினோத், கதிர்வேல் மற்றும் இன்னும் சிலர் சேர்ந்து சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே 'ஜஸ்ட் வின்' என்ற தனியார் நிதி நிறுவனத்தை நடத்தி வந்தனர்.

பின்னர் வேலூர், நாமக்கல், கிருஷ்ணகிரி உள்பட 8 இடங்களில் கிளை நிறுவனத்தையும் தொடங்கியுள்ளனர். இவர்கள் வாடிக்கையாளர்களிடம் 1 லட்சம் கட்டினால் 1 வருடத்தில் வட்டியோடு 1 லட்சத்து 60 ஆயிரம் திருப்ப கொடுப்பதாக விளம்பரம் செய்துள்ளனர்.

இதனை நம்பி இந்த நிறுவனத்தில் ஏராளமானோர் முதலீடு செய்துள்ளனர். இந்த வகையில் பலகோடி ரூபாய் வசூல் செய்த அவர்கள் சொல்லியபடி பணத்தை முதலீட்டாளர்களுக்கு கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து வேலூரை சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் பாலசுப்பிரமணியத்தை சந்தித்து பணம் தொடர்பாக கேட்டுள்ளனர். அப்போது அங்கு வாக்குவாதம் ஏற்பட்டு அடிதடியில் முறிந்துள்ளது.

அதன்பின்னர் பாதிக்கப்பட்டவர்கள் பாலசுப்ரமணியத்தின் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதனிடையே காடையாம்பட்டியை சேர்ந்த காவேரியப்பன் என்பவர் அழகாபுரம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், பணத்தை கேட்கச்சென்ற போது பாலசுப்ரமணியன் கொன்று விடுவதாக மிரட்டினார் என கூறியுள்ளார்.

இந்த நிலையில், பாலசுப்ரமணியன் மீதான புகாரின் அடிப்படையில் மோசடி, கொலை மிரட்டல், பண சுழற்சி திட்ட பிரிவு தடை சட்டம் ஆகிய பிரிவின் கீழ் பாலசுப்பிரமணியம், தனலட்சுமி, வினோத், கதிர் வேல் ஆகிய 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து சென்னையில் தலைமறைவாக இருந்த அவர்களை கைது செய்தனர்.

Also Read: எத்தனை சூடு போட்டாலும் திருந்தாத ஜென்மங்களை, எந்த வகையில் சேர்ப்பதோ ? -அண்ணாமலைக்கு சிலந்தி பதிலடி!