Tamilnadu
Juice குடித்த மாணவிக்கு நடந்த கொடூரம்.. தாய் மருத்துவமனையில் சிகிச்சை: சோகத்தில் மூழ்கிய கிராமம்!
தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு பகுதியைச் சேர்ந்தவர் மகாலிங்கம். இவரது மனைவி சாந்தி. இந்த தம்பதிக்கு லட்சுமி பரியா என்ற மகள் இருந்தார். இவர் நெல்லையில் தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில் கடந்த 11ம் தேதி சாந்தியும், மகள் லட்சுமி பிரியாவும் கயத்தாறில் உள்ள குளிர்பான கடையில் பழச்சாறு ஒன்றை பார்சல் வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வந்த இருவரும் குடித்துள்ளனர். பின்னர் சில மணி நேரத்திலேயே இருவருக்கும் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து இருவரையும் அருகே இருந்த தனியார் மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். பிறகு மேல் சிகிச்சைக்காக மதுரையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அங்கு இருவரும் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மகள் லட்சுமி பிரியா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் தாய் சாந்திக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பழச்சாறு கடையிலும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். பழச்சாறு குடித்ததில் பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
"தமிழ்நாட்டில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்" - அமைச்சர் தங்கம் தென்னரசு !
-
"தனி மனிதரை விட தத்துவங்கள்தான் அரசியலை வழிநடத்தும்" - சுதர்சன் ரெட்டிக்கு முதலமைச்சர் ஆதரவு !
-
Drop Test சோதனையை வெற்றிகரமாக செய்து முடித்த இஸ்ரோ... பத்திரமாக கடலில் இறங்கிய விண்கலன் !
-
அகற்றப்படும் பழைய பாம்பன் ரயில் பாலம்... நினைவு சின்னமாக பாதுகாக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை !
-
ஏமாற்றி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட பெண்கள்.. கரூர் பாஜக நிர்வாகியை கைது செய்த போலீஸ் !