Tamilnadu
கள்ளக்குறிச்சி கலவரம் : போலிஸ் மீது கல்வீசி காவல் வாகனத்துக்கு தீ வைத்த இளைஞர்கள் அதிரடி கைது !
கள்ளக்குறிச்சி தனியார் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி விடுதியில், கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள பெரிய நெசலூர் கிராமத்தைச் சேர்ந்த 12 ஆம் வகுப்பு மாணவி மரணம் தொடர்பாக ஏற்பட்ட போராட்டம் கலவரமாக மாறியது.
இதில் போராட்டக்காரர்கள் பள்ளிக்கு வெளியே பாதுகாப்பு பணிக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காவல்துறையின் வாகனங்கள் மற்றும் பள்ளிக்குள் இருந்த பள்ளிக்குச் சொந்தமான பேருந்துகள் மற்றும் வகுப்பறைகள் உள்ளிட்ட அனைத்து விதமான பொருட்களையும் அடித்து சேதப்படுத்தி தீ வைத்து எரித்தனர்.
இதனால் அப்பகுதி கலவர பூமியாக காட்சியளித்தது. இதனை அடுத்து தமிழக டி.ஜி.பி சைலேந்திரபாபு உத்தரவின் பெயரில் அப்பகுதியில் ஏராளமான போலிஸார் குவிக்கப்பட்டு போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், வானத்தை நோக்கி சுட்டும் போராட்டத்தை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
அதன்பின்னர் கலவரத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்யும் பணியில் போலிஸார் தீவிரப்படுத்தினர். இந்த வன்முறையில் ஈடுபட்ட 300-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். மேலும் கலவரம் பரவ காரணமாக இருந்த வாட்ஸ்அப் குழுக்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்த நிலையில், பள்ளி சொத்துகளை உடைத்து சேதப்படுத்திய கள்ளக்குறிச்சி மாவட்டம் ஏர்வாய்பட்டினம் கிராமத்தை சேர்ந்த சந்தோஷ் , சங்கராபுரம் அருகே பள்ளிப்பட்டு கிராமத்தை சேர்ந்த நவீன்குமார் , மேலும் போலிஸ் வாகனத்திற்கு தீ வைத்து கொளுத்திய கா.செல்லம்பட்டு கிராமத்தை சேர்ந்த மணிவர்மா மற்றும் போலிஸார் மீது கற்கள் வீசி தாக்கிய பின்னல்வாடி கிராமத்தை சேர்ந்த முருகன் ஆகிய நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.
மேலும், சொத்துக்களை சேதப்படுத்தியதோடு அங்கிருந்து சில பொருட்களையும் எடுத்துச் சென்றதாக சங்கராபுரம் தாலுகா செல்லம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த அஜித்குமார் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
Also Read
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!
-
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!