Tamilnadu
“டேய் மச்சா Party வைடா..” - party வைக்க மறுத்த நண்பனை சரமாரியாக தாக்கிய சக நண்பர்கள் !
சென்னை புது வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் அந்த பகுதியில் மெக்கானிக்கல் இன்ஜினியராக பணி புரிந்து வருகிறார். இந்த நிலையில், இவர் அலுவல் பணி நிமித்தமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு 'மாலத்தீவு' சென்றிருந்தார்.
பணி முடிந்து அண்மையில் ஊர் திரும்பிய இவரை, அவரது நண்பர்களான விக்டர், பிரபாகரன், சரண், ஆபிரகாம் ஆகியோர் சந்தித்தனர். அப்போது அனைவரும் டீ கடையில் நின்று டீ அருந்திக்கொண்டே, மாலத்தீவு பயணம் குறித்து கேள்விகளை எழுப்பினர். அப்படியே பேசிக்கொண்டிருந்த அவர்கள் ராஜ்குமாரிடம் மாலத்தீவு சென்று வந்ததால் மது party கேட்டுள்ளனர்.
ஆனால் ராஜ்குமாரோ இதற்கு மறுப்பு தெரிவித்தது மட்டுமல்லாமல், அந்த இடத்தை விட்டு நைசாக நழுவியுள்ளார். இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளான ராஜ்குமாரின் நண்பர்கள், கும்பலாக சேர்ந்து ராஜ்குமாரை தாக்க திட்டமிட்டுள்ளனர்.
அதன்படி, நண்பர்கள் அனைவரும் சந்தித்த அடுத்த நாள் மாலை அந்த கும்பல் ராஜ்குமாருக்காக காத்துக்கொண்டிருந்தது. அப்போது ராஜ்குமார் வந்ததும் அவரை வழிமறித்த சக நண்பர்கள், 'பார்ட்டி கேட்டதற்கு வைக்க மாட்டேன்-ஆ சொல்லுவ?' என்று கூறி மாறி மாறி தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த ராஜ்குமார் கத்தி கூச்சலித்ததையடுத்து அந்த இடத்தில் பொதுமக்கள் குவிந்தனர்.
மக்கள் கூடுவதை கண்டதும், அந்த கும்பல் அந்த இடத்தை விட்டு தப்பியோடிவிட்டனர். ஓடுவதற்கு முன்பு இதுகுறித்து காவல்துறையில் புகார் அளித்தார் நடப்பதே வேறு என்று மிரட்டலும் விடுத்தனர். பின்னர் ராஜ்குமாரை மீட்ட பொதுமக்கள், அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து ராஜ்குமார் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் விக்டர், பிரபாகரன், சரண், ஆபிரகாம் ஆகிய 4 பேரையும் அதிரடியாக கைது செய்தனர்.
அப்போது விசாரித்ததில் இவர்கள் 4 பேரும் புது வண்ணாரப்பேட்டை பகுதியில் உள்ள கடைகளில் மிரட்டி பணம் வாங்குவது மற்றும் வழிப்பறி நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வந்ததாகக் காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது என்பது குறிப்பித்தக்கது.
பார்ட்டி கேட்டு தர மறுத்த நண்பனை, சக நண்பர்களே சரமாரியாக தாக்கியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
கனமழையில் இருந்தும் உள்ளூர் மக்களை மட்டுமல்ல; கடல் கடந்து சென்றவர்களையும் காத்த தமிழ்நாடு அரசு : முரசொலி!
-
டிட்வா புயல் : சென்னை கட்டுபாட்டு மையம், புரசைவாக்கத்தில் துணை முதலமைச்சர் ஆய்வு!
-
IT ஊழியர்கள் பணிச்சுமை குறித்த கேள்வி.. ஆய்வுகள் இல்லை என்று சொல்லும் ஒன்றிய அமைச்சர் - சு.வெ. விமர்சனம்!
-
டிட்வா புயல்: “அடிப்படை வசதிகளையும் தேவைப்படும் காலம் வரை நமது அரசு வழங்கும்” -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
Re-entry கொடுத்த ஆதிரை: BB வீட்டிற்குள் யார் best ஆண்களா? பெண்களா? போட்டி போட்டு விளையாடும் housemates!