Tamilnadu

“பயணிகள் ஓய்வு எடுக்க “கேப்சூல் ஹோட்டல்” - சென்னை ஏர்போர்ட்டில் அசத்தல்” : சிறப்பம்சம் என்ன தெரியுமா ?

சென்னை உள்நாட்டு விமானநிலையம் வருகை பகுதியில் கண்வேயா் பெலட் 1 அருகே இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில் தற்போது தற்போது சோதனை அடிப்படையில் 4 படுக்கைகள் உள்ளன.

குறுகிய நேரம் ஓய்வுக்காக படுக்கை வசதி தேவைப்படும் பயணிகள் முன்னதாகவே,"sleepzo" என்ற முகவரியில் ஆன்லைன் முன்பதிவு செய்ய வேண்டும். அதில் ஒவ்வொரு மணி நேரத்தின் அடிப்படையில் கட்டணம் வசூலிக்கப்படும். ஒரு படுக்கையில் ஒரு பயணியும், 12 வயதுக்கு உட்பட்ட ஒரு குழந்தையும் அனுமதிக்கப்படுவார்கள்.

அந்த படுக்கை அறைக்குள் பயணிகளின் லக்கேஜ் வைக்கும் இடம் மற்றும் செல்போன் சார்ஜ் வசதி, புத்தகம் படிப்பதற்கான விளக்கு வசதி, ஏ.சியை கூட்டி, குறைப்பதற்கான வசதிகள் உள்ளன.

இந்த குறுகிய நேரம் ஓய்வுக்கான படுக்கை வசதி, குறிப்பாக ஒரு விமானத்தில் வந்து, மற்றொரு விமானத்தில் பயணம் செய்யவும் டிராண்சிஸ்ட் பயணிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். அந்தப் பயணிகள் யாரும் கேட்கவில்லை என்றால், மற்ற பயணிகளுக்கு இடம் ஒதுக்கீடு செய்யப்படும்.

விமான பயணிகள் அவர்களுடைய விமான டிக்கெட் போடிங் பாஸ் பி.என்.ஆர் நம்பரை வைத்து முன்பதிவு செய்ய முடியும். விமான பயணிகள் அல்லாதவர்களுக்கு இங்கு இடம் கொடுக்கப்பட மாட்டாது. இந்த புதிய சோதனை அடிப்படையில் 4 படுக்கைகளுடன் கூடிய இந்த புதிய, கேப்சூல் ஹோட்டலை இன்று, சென்னை விமான நிலைய இயக்குனர் சரத்குமார் திறந்து வைத்தார்.

சென்னை விமானநிலையத்தின் இத்தகைய ஏற்பாட்டுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களின் பாராட்டைத் தெரிவித்து வருகின்றனர்.

Also Read: விமானத்தின் சீட்டிற்கு அடியில் மறைத்து வைக்கப்பட்ட கறுப்பு பார்சல்: ஏர்போர்ட்டில் நடந்த பரபரப்பு சம்பவம்!