Tamilnadu
மாணவிகளே உஷார்..! lift கொடுப்பதாக கூறி கல்லூரி மாணவியை கடத்த முயன்ற இளைஞர்.. மடக்கி பிடித்த போலிஸ்
கிருஷ்ணகிரி மாவட்டம் இராயக்கோட்டை அருகே உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரி ஒன்று உள்ளது. இந்த கல்லூரியில் படிக்கும் மாணவி ஒருவர், கல்லூரிக்கு செல்வதற்கு பேருந்துக்காக பேருந்து நிலையத்தில் காத்திருந்தார்.
அந்த சமயத்தில் அங்கு பைக்கில் வந்த இளைஞர் ஒருவர், அந்த மாணவியிடம் வழி கேட்பது போல் பேச்சு கொடுத்துள்ளார். பிறகு தான் கல்லூரி வழியாக போவதாகவும், எனவே தங்களை அங்கே இறக்கி விடுகிறேன் என்று கூறியுள்ளார். முதலில் மறுப்பு தெரிவித்த அந்த மாணவி, பிறகு கல்லூரிக்கு நேரமானது என்ற காரணத்தினால் அவருடன் பைக்கில் ஏறி அமர்ந்துள்ளார்.
அப்போது அந்த இளைஞர் கல்லூரி வழியே செல்லாமல் மாற்று வழியாக கூட்டி சென்றுள்ளார். இதில் சந்தேகமடைந்த மாணவி, அவரிடம் பைக்கை நிறுத்துமாறு கூறியுள்ளார். ஆனால் அந்த நபர் நிறுத்தாமல் சென்றதால் பதற்றமடைந்த மாணவி, ஓடிக்கொண்டிருந்த பைக்கில் இருந்து குதித்து தப்பித்துள்ளார்.
பிறகு இந்த சம்பவம் குறித்து அருகிலிருந்த காவல் நிலையத்தில் மாணவி புகார் அளித்ததன் பேரில், சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த அதிகரிகள் அதனடிப்படையில், கொல்லப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவரை சுற்றி வளைத்து அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
"நாக்பூர் குருபீட அடிமைச் சேவகர் பழனிசாமி இது பற்றி பேசலாமா?- CPI மாநிலச் செயலாளர் முத்தரசன் விமர்சனம்!
-
”அறியாமை இருளில் மூழ்கியுள்ளார் பழனிசாமி” : அமைச்சர் சேகர்பாபு பதிலடி!
-
பி.எட். மாணாக்கர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு தேதி நீட்டிப்பு... அமைச்சர் கோவி.செழியன் அறிவிப்பு !
-
”திட்டங்களை உரிய காலத்தில் நிறைவேற்ற வேண்டும்” : அதிகாரிகளுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்!
-
பா.ஜ.கவின் கொத்தடிமையாக செயல்படும் எடப்பாடி பழனிசாமி : இரா.முத்தரசன் கடும் தாக்கு!