Tamilnadu
Cold Coffee, பலாப்பழ ஐஸ்கிரீம்.. ஆவின் அறிமுகம் செய்ய உள்ள 10 புதிய பொருட்கள் இவைதான்!
தமிழ்நாட்டில் தி.மு.க அரசு ஆட்சி அமைந்ததிலிருந்து ஆவின் நிறுவனத்தில் பல்வேறு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. சில நாட்களுக்கு முன்பு ஆவின் நிறுவனத்தின் சார்பில் குடிநீர் பாட்டில் விற்பனை விரைவில் தொடங்க உள்ளது என அமைச்சர் நாசர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் Cold Coffee, பலாப்பழ ஐஸ்கிரீம், உள்ளிட்ட 10 புதிய பொருட்களை அறிமுகம் செய்ய உள்ளது. அந்த புதிய பொருட்கள் இவைதான்:-
1. கோல்டு காஃபி (Cold Coffee)
2. வெள்ளை சாக்லேட்
3. பலாப்பழ ஐஸ்கிரீம்
4. வெண்ணெய் கட்டி
5. பாசுந்தி
6. ஆவின் ஹெல்த் மிக்ஸ்
7. பாலாடை கட்டி
8. அடுமனை யோகர்ட்
9. ஆவின் பால் பிஸ்கட்
10. ஆவின் வெண்ணெய் முறுக்கு
இந்த 10 புதிய பொருட்கள் விற்பனையை பால்வளத்துறை அமைச்சர் நாசர் ஆகஸ்ட் 20ம் தேதி தொடங்கி வைக்கிறார். ஆவின் நிறுவனத்தின் இந்த புதிய பொருட்கள் விற்பனை அறிவிப்பு மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.
Also Read
-
ரூ.74.70 கோடியில் சென்னை மாநகராட்சியின் புதிய மன்றக்கூடம் : அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
-
சென்னையின் கலாச்சாரச் சின்னம் : புனரமைக்கப்பட்ட விக்டோரியா பொது அரங்கத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர்!
-
“எந்த பாசிச சக்திகளாலும் ஒன்றும் செய்ய முடியாது” : கிறிஸ்துமஸ் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
“எங்களுக்கு யாரைக் கண்டும் எந்த பயமும் கிடையாது” : கனிமொழி எம்.பி அதிரடி!
-
“திராவிட மாடலின் சாதனைகள் தொடரும்; உழவர் வாழ்வு செழிக்கும்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!