Tamilnadu

பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டு சாதனை.. பட்டதாரி பெண்ணுக்கு முதலமைச்சரின் இளைஞர் விருது அறிவிப்பு !

நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த குரவபுலம் கிராமத்தைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி சிவரஞ்சனி. விவசாய குடும்பத்தில் பிறந்த இவர் சிறுவயது முதலே நெல் உள்ளிட்ட தானியங்கள் பயிரிடுவதால் ஆர்வம் காட்டி வந்துள்ளார்.

பின்னர் அழிந்துவரம் பாரம்பரிய நெல் ரகங்களை சேகரித்து வரும் வழக்கொழிந்த பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டுள்ளார். தனது விவசாய நிலையில், தமிழக நெல் ரகமான 174 ரகங்கள் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 1,250 நெல் ரகங்களை மீட்டு எடுத்துள்ளார்.

இந்த நிலையில், இவர் தமிழ்நாடு முதலமைச்சரின் இளைஞர் விருதுக்குத் தேர்வாகியுள்ளார். இவருக்கு வரும் சுதந்திர தினத்தின்று விருதும் ,ஒரு லட்சம் பரிசு தொகையும் முதலமைச்சர் வழங்கி சிறப்பிக்க உள்ளார்.

இதேபோல சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றிய வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த விஜயகுமார், ஸ்ரீகாந்த் ஆகிய இருவரும் மற்றும் நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த முகம்மது ஆஷிக் ஆகியோருக்கும் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: கலிபோர்னியாவில் பள்ளி மாணவர்களுக்கான இலவச உணவு திட்டம் அமல்.. முன்னோடியாக செயல்படும் தமிழகம் !