Tamilnadu

189 நாட்டு வீரர்கள் முன்னிலையில் திராவிட மாடல் அரசு சாதனைகளை பட்டியலிட்டு பாடம் எடுத்த முதல்வர்!

Ancient Tamil poet Kaniyan Poongundranar in his 2000 years old Sangam Era poem has said “யாதும் ஊரே யாவரும் கேளிர்” ! which means, “the whole world is my home and everyone is my kith and kin”. அந்த வகையில் தமிழ்நாடு அரசு 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை அனைவரும் மெச்சத்தக்க வகையில்மிகக் குறுகிய காலத்தில் வெகு சிறப்பாக நடத்திமுடித்துள்ளது.

செஸ் ஒலிம்பியாட் விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைப்பதற்காக இந்தியப் பிரதமர் மாண்புமிகு நரேந்திரமோடி அவர்கள் கடந்த 28 ஆம் தேதி வருகை தந்திருந்தார்கள். இதே நேரு உள்விளையாட்டு அரங்கில் மாபெரும் - கண்கவர் கலைநிகழ்ச்சிகளோடு போட்டியைத் தொடங்கி வைத்தார்கள்.

அப்போது நான் பேசும் போது - '' இந்திய நாடு இதுவரை அடையாத ஒரு பெரும்புகழை அடையும் நாளாக இந்த நாள் அமைந்துள்ளது. முதன் முதலாக இப்போது தான் இந்தியாவில் நடக்கிறது என்பது நமக்குக் கிடைத்த பெருமையாகும்.

அதிலும் குறிப்பாகத் தமிழ்நாட்டில் நடைபெறுவது அதைவிட மிகப்பெரிய பெருமையாகும்" என்று சொன்னேன். இதன் மூலமாக இந்தியாவின் புகழ், தமிழ்நாட்டின் புகழ் உலகம் முழுக்க பரவும், உலக நாடுகளின் மத்தியில் நம்முடைய செல்வாக்கு உயரும் என்று குறிப்பிட்டேன்.

அதனைத்தான் கடந்த இரண்டு வாரங்களாக நாங்கள் பார்த்து வருகிறோம். இங்கு வருகை தந்த செஸ் விளையாட்டு வீரர்களும் பயிற்சியாளர்களும் , தமிழ்நாடு அரசின் சார்பில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள், வசதிகள் குறித்து பாராட்டி சமூக ஊடகங்களில் நன்றி தெரிவிக்கும் போது நான் அடையும் மனமகிழ்ச்சிக்கு இணையானது எதுவுமில்லை. போட்டியில் வெற்றி பெற்றவர்களை விட- நான் அதிகமான மகிழ்ச்சியில் இருக்கிறேன்.

செஸ் ஒலிம்பியாட் போட்டி நடத்த திட்ட உடனேயே அதற்காக 102 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு ஆணையிட்டது.

கடந்த மார்ச் 16 ஆம் நாள் இதற்கான முறையான அறிவிப்பை நான் வெளியிட்டேன். விளையாட்டுப் போட்டியை நடத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்வதற்கான 18 துணைக் குழுக்களையும் தமிழ்நாடு அரசு உருவாக்கியது.

நான்கே மாதங்களில் சர்வதேசப் போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழ்நாடு அரசு சிறப்பாகச் செய்தது. உலகமே வியக்கும் அளவுக்கு போட்டியையும் நடத்தி முடித்துவிட்டோம்.

இதற்குக் காரணமாக தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன் அவர்களையும், இத்துறையைச் சேர்ந்த செயலாளர் அபூர்வா அவர்களையும் அதிகாரிகள் அனைவரையும் நான் பாராட்டுகிறேன். உங்களிடம் தரப்பட்ட பணியை மிகமிகச் சிறப்பாகச் செய்துள்ளீர்கள். உங்களது திறமையும், செயலும் தமிழ்நாடு அரசுக்கு மிகப்பெரிய பெருமையை ஏற்படுத்தித் தந்துள்ளது.

அனைத்துத் துறைகளிலும் தமிழ்நாடு வளர வேண்டும் என்று உழைத்து வருகிறோம். அதில் விளையாட்டுத் துறையும் முக்கியமானது என்பதை மனதில் வைத்துக் கொண்டு செயல்பட்டு வருகிறோம்.

இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்குப் பிறகு தமிழ்நாடு அரசின் விளையாட்டுத் துறையானது முன்னிலும் அதிக பாய்ச்சலோடு செல்லும் என்று நான் உறுதி அளிக்கிறேன்.

“அதற்குள் முடிந்து விட்டதா?“ என்று ஏங்கும் வகையில் மிகச் சிறப்பாக இந்தப் போட்டிகள் நிறைவு பெற்றுள்ளன.

வெற்றி பெற்ற வீரர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுகள். அடுத்தடுத்த ஆண்டுகளில் வெற்றி பெறப் போகும் வீரர்களுக்கும் எனது வாழ்த்துகள். எதிலும் வெற்றி - தோல்வி முக்கியமல்ல, பங்கேற்பு தான் முக்கியமானது. இந்த பங்கேற்பு ஆர்வத்தை எப்போதும் விட்டுவிடாதீர்கள் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்." என தெரிவித்துள்ளார்.

Also Read: தமிழக அரசின் அடுத்த இரண்டு பெரிய முயற்சிகள்.. Chess Olympiad விழா உரையில் குறிப்பிட்ட முதலமைச்சர்!