Tamilnadu
மனைவியின் 300 சவரன் நகையை திருடி தோழிக்கு கார் வாங்கிய கணவர்.. வசமாய் சிக்கிய சுவாரஸ்ய சம்பவம் !
சென்னை பூந்தமல்லியை சேர்ந்தவர் சேகர் (வயது 40). இவருக்கு திருமணமாகி தனது மனைவி, தம்பி, தாய் என்று கூட்டுகுடும்பமாக வாழ்ந்து வந்துள்ளார். இவர் தனது தம்பியுடன் சேர்ந்து பூந்தமல்லி பேருந்து நிலையம் அருகே ஒரு ஸ்வீட் கடை நடத்திவருகிறார். மேலும் பைனான்ஸ் தொழிலும் செய்து வருகிறார்.
கடந்த சில மாதங்களாக சேகரை அவரது மனைவி பிரிந்து அவரது அம்மா வீட்டில் வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டிற்கு திரும்பி வந்த சேகரின் மனைவி, வீட்டிலிருந்த பீரோவை சோதனை செய்தார். அப்போது அதிலிருந்த அவரது 300 சவரன் நகை காணாமல் போனது தெரியவந்தது.
இது குறித்து கணவரின் தம்பி ராஜேஷ் மற்றும் மாமியாரிடம் கேட்டபோது அவர்களுக்கு எதுவும் தெரியவில்லை. பின்னர் அவர்கள் பீரோவை சோதனை செய்த போது, தாயின் 200 சவரன் நகையும், 5 தங்க கட்டிகளும் காணாமல் போனதும் தெரியவந்தது.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து அவர்கள் பூந்தமல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது குடும்பத்தாரிடம் நடத்திய விசாரணையில், சேகரின் பதில் காவல்துறைக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதனால் அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டது.
அப்போது அவர், தான் தான் வீட்டிலிருந்த நகைகளை எடுத்ததாக ஒப்புக்கொண்டார். மேலும் அந்த 500 சவரன் நகைகள், 5 தங்க கட்டிகளை விற்று தனது பெண் தோழிக்கு கார் ஒன்றை பரிசாக அளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து விசாரித்தபோது, தனக்கும் வேளச்சேரி கேசரிபுரத்தை சேர்ந்த ஸ்வாதி (வயது 22) இளம்பெண்ணுக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டதாகவும், நாங்கள் இருவரும் போரூர் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் அடிக்கடி சந்திப்பதாகவும், மேலும் அவருக்காக தான் இந்த நகைகளை வைத்து கார் வாங்கி கொடுத்ததாகவும் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
இதையடுத்து இளம்பெண்ணுக்காக சொந்த வீட்டிலேயே நகையை திருடிய சேகரையும், அந்த பெண்ணையும் காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் இளம்பெண்ணிடம் இருந்து கார் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் நகைகள் குறித்து விசாரணையும் மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக இதே போன்று சென்னை புதுப்பேட்டையில் மனைவியின் நகையை திருடி கணவன் தனக்கு 'புல்லட்' பைக்' வங்கியுள்ள சம்பவம் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“நிலவில் முதலில் கால் வைத்தது பாட்டிதான் என்றுகூட சொல்வார்கள்!” : பாஜக-வினரை விமர்சித்த கனிமொழி எம்.பி!
-
வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மும்முரம்! : சென்னை மாநகராட்சி தகவல்!
-
ஆதாரை ஆவணமாக ஏற்கக் கூடாது... தேர்தல் ஆணையத்துக்கு ஆதரவாக வாதிட்ட பாஜக - உச்சநீதிமன்றத்தின் பதில் என்ன?
-
"வரும் தேர்தலில் 3-ம் இடத்துக்கு விஜய்க்கும் சீமானுக்கும்தான் போட்டி" - அமைச்சர் ஐ.பெரியசாமி பேட்டி !
-
‘பி.எட்.’ மற்றும் ‘எம்.எட்.’ பாடப்பிரிவுகளுக்கான மாணாக்கர் சேர்க்கை! : விண்ணப்பிப்பதற்கான விவரம் உள்ளே!