Tamilnadu
கொட்டும் மழையிலும் ஆழ்ந்த தியானத்தில் மூழ்கிய சிறுவன்.. வழுக்கும் பாறை மேல் ஒற்றை காலில் நின்று சாகசம் !
தென்மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக கன்னியாகுமரியில் கடந்த 3 நாட்களாக விடாமல் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த மழையினால், கன்னியாகுமரியை சுற்றி பார்க்க வந்த சுற்றுலா பயணிகள், சுற்றுலாத்தளங்களை பார்வையிட முடியாமல் பரிதவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், கன்னியாகுமரி கடலுக்கும், பகவதி அம்மன் கோயிலுக்கும் இடையே இருக்கும் சுவற்றில், சிறுவன் ஒருவன் தியானத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது மழை கொட்டோ கொட்டென்று கொட்ட, இருப்பினும் அந்த சிறுவன் தனது தியானத்தில் முழுமையாக மூழ்கி கிடந்துள்ளார்.
இதையடுத்து அதே சுவற்றில், வழுக்கும் பாறையின் மீது ஒற்றை காலில் நின்று மீண்டும் தியானத்தில் ஈடுபட்டார்.
சிறுவனின் இந்த சாகச செயலை அங்கிருந்த சுற்றுலா பயணிகள் புகைப்படமாகவும், விடியோவாகவும் எடுத்தனர். ஆனால் அந்த சிறுவன் யார்? ஏன் அவ்வாறு செய்தார் என்பது குறித்த தகவல்கள் வெளிவரவில்லை. சிறுவன் தியானம் செய்த இந்த சுவரானது சரியாக விவேகானந்தரின் நினைவு மண்டபத்திற்கு நேர் எதிரில் அமைந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
திரும்பத் திரும்ப... "வயிற்றெரிச்சலால் அறிக்கை விட்டிருக்கிறார் பழனிசாமி" - அமைச்சர் TRB ராஜா விமர்சனம் !
-
பப்ஜி முதல் பாரம்பரிய விளையாட்டுகள் வரை.. சென்னையில் கேமிங் திருவிழா... குவிந்த இளைஞர்கள் !
-
வடகிழக்குப் பருவமழை - மக்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது : அதிகாரிகளுக்கு துணை முதலமைச்சர் அறிவுறுத்தல்!
-
”இந்தியாவின் ஏற்றுமதி துறைகளைப் பாதுகாக்க புதிய கொள்கையை வடிவமைக்க வேண்டும்” : TN CM Stalin வலியுறுத்தல்!
-
ஆன்லைன் பண மோசடி : பொதுமக்களுக்கு காவல்துறையின் எச்சரிக்கை என்ன?