Tamilnadu
ரூ.30 லட்சம் கொடுக்கவேண்டும்.. மனைவி குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டிய கணவர்- வெளிவந்த அதிர்ச்சி பின்னணி!
சென்னைக்கு அருகே உள்ள நன்மங்கலத்தைச் சேர்ந்தவர் பிரவீன்குமார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்துள்ளார். இந்த பெண் பிரவீன் குமாரின் நண்பரின் முன்னாள் காதலி என்று சொல்லப்படுகிறது.
திருமணம் முடிந்த பின்னர் தனது மனைவியிடம் கடந்த கால வாழ்கை குறித்து கேட்டு பிரவீன்குமார் தொல்லை கொடுத்துள்ளார். மேலும், அவருடன் இன்னும் தொடர்பில் இருக்கிறாயா என்றும் கொடுமை படுத்தியுள்ளார்.
பின்னர் மனைவியின் போனை எடுத்த அவர், அதில் அழிக்கப்பட்ட பழைய புகைப்படங்களை தொழில்நுட்ப உதவியோடு மீண்டும் பதிவிறக்கம் செய்துள்ளார். அந்த பழைய புகைப்படங்களை மனைவியிடம் காட்டி இது தொடர்பாக அவரை தாக்கியும் வந்துள்ளார்.
இதன் பின்னர், தனது மனைவி குளிப்பதை வீடியோ பதிவு செய்த அவர், அதை மனைவியிடம் காட்டியுள்ளார். மேலும் தாங்கள் தனிமையில் இருந்தபோது எடுத்த வீடியோ காட்சிகளையும் அவரிடம் காட்டியுள்ளார்.
மேலும், இந்த வீடியோக்களை எல்லாம் உறவினர்களிடம் காட்டாமல் இருக்க வேண்டும் என்றால் ரூ.30 லட்சம் தர வேண்டும் என்றும் சொந்த மனைவியை மிரட்டியுள்ளார். இது தொடர்பாக அந்த பெண் தன் பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார். அவர்களும் தங்களது மருமகனிடம் பேசிப்பார்த்த நிலையில் 30 லட்சம் கொடுக்க வேண்டும் என்று தொடர்ந்து கூறி வந்துள்ளார்.
இதனால் அதிருப்தி அடைந்த அவர்கள் சம்பவம் தொடர்பாக தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜிடம் புகார் அளித்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
தொடர்ந்து 4 நாட்களாக சசிகாந்த் உண்ணாவிரத போராட்டம்.. முதலமைச்சரின் கோரிக்கைக்கு இணங்க போராட்டம் முடிவு!
-
"நயினார் நாகேந்திரன் தேவையில்லாமல் வாயை கொடுத்து மாட்டிக்கொள்கிறார்" - அமைச்சர் TRB ராஜா பதிலடி !
-
கச்சத்தீவு விவகாரம் : “இலங்கை அதிபரின் பேச்சு, இருநாட்டு உறவுக்கு எதிரானது” - CPI முத்தரசன் கண்டனம்!
-
முதலமைச்சரின் ஜெர்மனி பயணம் மூலம் ரூ.7020 கோடி முதலீடு... 15,320 நபர்களுக்கு வேலைவாய்ப்பு உறுதி !
-
மூப்பனாரை பிரதமராக்க முயன்றவர் கலைஞர்.... திடீரென்று தமிழ் வேடம் போட்ட நிர்மலா - முரசொலி விமர்சனம் !