Tamilnadu
காட்டுக்கு அழைத்து சென்று காதல் மனைவி குத்திக் கொலை.. CCTV-யால் சிக்கிய கணவர் ! பின்னணி என்ன ?
சென்னை செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் ஜோதி நகர் 8வது தெருவை சேர்ந்த மதன் (வயது 19) என்பவரும், புழல் அருகே கதிர்வேடு ஜான்விக்டர் தெருவை சேர்ந்த தமிழ்ச்செல்வி( வயது 19) என்பவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
இந்த நிலையில், கடந்த ஜூன் மாதம் 25ம் தேதி தமிழ்ச்செல்வி மாயமானார். அவர் குறித்து தமிழ்ச்செல்வியின் பெற்றோர் மதனிடம் விசாரித்தபோது பதில் ஏதும் கிடைக்கவில்லை. இதனால் அவர்கள் கடந்த ஜூன் 30ம் தேதி செங்குன்றம் காவல் நிலையத்தில் மகள் காணாமல் போனது தொடர்பாக புகார் அளித்துள்ளனர்.
புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய போலிஸார் ஆந்திர மாநிலத்தில் உள்ள கோனே அருவிக்கு மதனும் தமிழ்ச்செல்வியும் குளிக்க சென்றதை அறிந்து கொண்டனர். இதனால் மதன்தான் தமிழ்ச்செல்வியை கொலை செய்திருப்பார் என அவரை தீவிரமாக தேடி வந்தனர்.
பின்னர் கோனே அருவிக்கு சென்ற போலிஸார் அங்கு அருவிக்கு செல்லும் பாதையில் வனத்துறையினர் வைத்துள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் மதனும் தமிழ்செல்வியும் வனத்துக்குள் செல்வது தெரியவந்தது. அதேநேரம் மதன் மட்டும் திரும்பி வந்ததும் பதிவாகியிருந்தது.
பின்னர் மதனை பிடித்து போலிஸார் விசாரணை நடத்தியபோது, அருவயில் வைத்து தமிழ்ச்செல்வியை கத்தியால் குத்திவிட்டு மதன் தப்பி வந்தது தெரியவந்தது. பின்னர் போலிஸார் அங்கு சென்று தேடியபோது தமிழ்செல்வியின் சடலத்தை கண்டுபிடித்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
”இது முட்டாள்தனம்” : ஹரியானா வாக்காளர் பட்டியலில் இடம் பெற்ற பிரேசில் மாடல் Reaction!
-
நலம் காக்கும் ஸ்டாலின்: அரசு நடத்தும் 10 சிறப்பு போட்டிகள்.. எப்போது? யார் யார் பங்கேற்கலாம்? - விவரம்!
-
KGF நடிகர் திடீர் மரணம் : சக நடிகர்கள் இரங்கல்!
-
”உச்சநீதிமன்ற தீர்ப்பு மற்றும் அரசு விதிகளுக்கு உட்பட்டே பதவி உயர்வு” : பதிவுத்துறை விளக்கம்!
-
சாலையில் கொழுந்துவிட்டு எரிந்த பைக் : உயிர்தப்பிய நண்பர்கள் - நடந்தது என்ன?