Tamilnadu
180 நாடுகள்.. 2000 வீரர்கள்: இன்று கோலாகலமாகத் தொடங்கும் 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி!
சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் இன்று முதல் ஆகஸ்ட் 10ம் தேதிவரை 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டியின் தொடக்க விழா இன்று சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் கோலாகலமாகத் தொடக்க உள்ளது.
44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியை இன்று மாலை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
மேலும் ஒன்றிய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் சிங் தாகூர், ஒன்றிய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை இணையமைச்சர் எல்.முருகன், தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ மெய்யநாதன், சர்வதேச சதுரங்க கூட்டமைப்பு தலைவர் அர்கடி துவார்கோவிச், ஆசியச் சதுரங்க கூட்டமைப்பு தலைவர் எச்.எச்.ஷேக் சுல்தான் பின் கலிபா அல் நயன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
இந்த பிரம்மாண்ட தொடக்க விழாவில் தமிழ்நாட்டின் செழுமையான கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் கண்கவர் கலை நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்த தமிழ்நாடு அரசு சிறப்பான முயற்சிகளைச் செய்துள்ளது. இந்த போட்டி மாமல்லபுரத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனி கவனம் செலுத்தி இன்று வரை அனைத்து பணிகளையும் மேற்பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார். இன்று முதல் நாள் தொடக்க விழா மட்டுமே நடைபெறுகிறது. நாளை ஜூலை 29ம் தேதியிலிருந்தே போட்டிகள் நடைபெறுகின்றன.
Also Read
-
கையை கட்டிக்கொண்டு இருக்க முடியுமா? : ஆளுநர் வழக்கில் உச்சநீதிமன்றம் சரமாரிக் கேள்வி!
-
”தமிழ்நாட்டில் இரு மடங்கு அதிகரித்த பட்டு உற்பத்தி” : பெருமையுடன் சொன்ன அமைச்சர் தா.மோ.அன்பரசன்!
-
கருப்பு சட்ட மசோதா : “எதிர்க்கட்சிகளை அழிக்க நினைக்கும் மட்ட ரகமான உத்தி இது” - ஜவாஹிருல்லா கண்டனம்!
-
குலசேகரப்பட்டினம் ஏவுதளத்துக்காக ரூ.985.96 கோடி நிதி ஒதுக்கீடு! : கனிமொழி எம்.பி.க்கு ஒன்றிய அரசு பதில்!
-
”அப்பட்டமான கருப்புச் சட்டம்” : அரசியல் சட்டத் திருத்த மசோதாவுக்கு கி.வீரமணி கண்டனம்!