Tamilnadu
உணவு இடைவேளையில் பாலியல் தொல்லை.. தலைமை ஆசிரியரை போக்சோவில் கம்பி எண்ண வைத்து பாடம் புகட்டிய பள்ளி மாணவி!
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு ஒன்றியம் அருகே தொடக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்தப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பால்வண்ணன் (52) பணியாற்றி வருகிறார். இவர் ஏற்கனவே முன்பிருந்த பள்ளியில் பாலியல் குற்றச்சாட்டு புகாரில் சிக்கி நடவடிக்கைக்கு ஆளாகியுள்ளார்.
இந்நிலையில், சஸ்பெண்ட் ஆன பிறகு பேரணாம்பட்டுப் பள்ளிக்குத் தலைமை ஆசிரியராக பொறுப்பு வகித்த வந்த நிலையில், 5ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரிடம் நேற்று முன்தினம் மதிய இடைவேளையில், தவறாக நடந்துக்கொண்டுள்ளார்.
இதனால் மாணவி கூச்சலிட்டு கதறி அழுதுள்ளார். ஆனாலும் விடாமல் மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். அப்போது அவ்வழியாக வந்தமற்றோரு மாணவி அதனை பார்த்துள்ளார். ஆனால் பால்வண்ணன் அந்த மாணவியை மிரட்டி அனுப்பி வைத்துள்ளார்.
இந்நிலையில், மிரட்டலுக்கு உள்ளான மாணவி, தலைமை ஆசிரியரின் பாலியல் அத்துமீரலை பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோரிடம் கூறியுள்ளார். பின்னர் சிறுமியின் பெற்றோர் அளித்தப்புகாரின் பேரில், வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு போலிஸார் பால்வண்ணம் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தலைமை ஆசிரியரின் நடவடிக்கை தைரியமாக சொன்ன மாணவிக்கு போலிஸார் உட்பட பலரும் பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்தனர்.
Also Read
-
பா.ஜ.க.வின் பெயரைப் பயன்படுத்த த.வெ.க அச்சப்படுவது ஏன்? - தொடரும் கள்ள மெளனம்!
-
மாணவர்களுக்கு இருக்கும் துணிச்சல்கூட இந்த 'டம்மி' முதல்வருக்கு இல்லை என்பது வெட்கக்கேடு : திமுக ஐடி விங்!
-
தூத்துக்குடி முத்துக்களுக்கான புவிசார் குறியீடு எப்போது? : கனிமொழி MP கேள்விக்கு ஒன்றிய அமைச்சர் பதில்!
-
டெல்லியைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் மாணவர் அமைப்பினர் கைது! : எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கண்டனம்!
-
நீட் தேர்வின் ஆபத்தை முதன்முதலில் எச்சரித்தது தி.மு.க.தான் : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்!