Tamilnadu
மது போதையில் தள்ளாடி கீழே விழுந்த பா.ஜ.க பஞ்சாயத்து தலைவர் : தலையில் அடித்தபடி தூக்கி சென்ற நிர்வாகிகள்!
திருப்பூர் மாவட்டம், மாதப்பூர் பஞ்சாயத்து தலைவராக இருப்பவர் அசோக்குமார். பா.ஜ.க கட்சியைச் சேர்ந்த இவர் திருப்பூர் மாவட்ட செயற்குழு உறுப்பினராகவும் உள்ளார். இந்நிலையில் கடந்த 17ம் தேதி ராயர்பாளையத்தில் பா.ஜ.கவின் 8 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அண்ணாமலை உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் அசோக்குமாரும் பங்கேற்றுள்ளார். பின்னர் கூட்டம் முடிந்த பிறகு தனது தொண்டர்களுடன் சேர்ந்து கொண்டு அசோக்குமார் தனியார் உணவு விடுதி ஒன்றில் மது குடித்துள்ளார்.
அப்போது அளவுக்கு அதிகமாக மது குடித்ததால் அவரால் எழுந்து கூட நிற்க முடியவில்லை. இதனால் அவருடன் வந்த தொண்டர்கள் மூன்று பேர் சேர்ந்து அவரை அங்கிருந்து அலேக்காக தூக்கிச் சென்றுள்ளனர்.
தற்போது மது போதையில் எழுந்து கூட நிற்க முடியாமலிருந்த அசோக்குமாரை தூக்கிச் செல்லும் வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்ப ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த வீடியோவை பார்த்தவர்கள் இதுதான் பா.ஜ.க பஞ்சாயத்துத் தலைவரின் லட்சணமா என விமர்சித்து வருகின்றனர்.
Also Read
-
"ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் களத்தில் கண்துஞ்சாமல் செயல்பட்டு, மக்களைக் காப்போம்" - முதலமைச்சர் உறுதி !
-
அடுத்த இரண்டு நாட்களுக்கு வெளுக்கப்போகும் மழை... எந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்? - விவரம் உள்ளே!
-
பருவமழை குறித்து திமுக சார்பில் நாளை ஆலோசனைக் கூட்டம்... தலைமைக் கழகம் அறிவிப்பு !
-
காவலர் வீரவணக்க நாள் விழா : 175 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர்!
-
தொடங்கிய வடகிழக்கு பருவமழை... தென்சென்னை பகுதியில் துணை முதலமைச்சர் ஆய்வு!